சிறுவர்மணி

வா வா விடுமுறையே..

இந்திய விடுதலை நாள்தனிலே இனிய விடுமுறை வந்ததென்று

தினமணி செய்திச் சேவை

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

இந்திய விடுதலை நாள்தனிலே

இனிய விடுமுறை வந்ததென்று

எண்ணியே போக்கில் மகிழ்வதென்று

எங்கும் திரிதல் சரியன்று!

-

விடுமுறை விட்டதன் நோக்கமனதை

விளங்காது நடத்தல் முறையன்று!

உடுக்க வாங்கிய உடை மேலே

உறங்கிப் புரளுதல் போலதுவே!

-

நாட்டின் விடுதலை நாடித்தான்

நமது முன்னோர் நன்குழைத்தார்!

வீட்டில் கிடந்து உறங்கிடாமல்

விடுதலை வென்றிடும் வீரரானார்!

-

அந்தியர் கொடுமை அகற்றிடவும்

இந்திய மண்ணை மீட்டிடவும்

சொத்து சுகமதைத் துறந்திட்டார்!

சோர்வில்லாதத் துணிவால் வெற்றி கண்டார்!

-

அவரது வாழ்க்கை அறிந்திடவும்

அவர்தம் செயல்கள் போற்றிடவும்

தவறாது வருவதே விடுமுறை!

தவறாது நன்றி சொல்வதற்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர்கிறேன்... ஐஸ்வர்யா மேனன்!

அலைபாயுதே... மேகா ஷுக்லா!

வசந்தம்... அதுல்யா ரவி!

ஜஸ்ட் லைக் இட்... திஷா பதானி!

”துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை வரவில்லை!” | தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!

SCROLL FOR NEXT