எட்டு வை
ஒன்று சேர்ந்து வாழணும் ஓங்கி உயர்ந்து நிற்கணும்
ஒன்று சேர்ந்து வாழணும்
ஓங்கி உயர்ந்து நிற்கணும்
இரண்டு முறைசரி பார்க்கணும்
Advertisement
Advertisement
இறுதியாய் முடிவை எடுக்கணும்
-
மூன்று முறைநூல் கற்கணும்
முத்தான சொற்கள் பேசணும்
நான்கு நண்பர்கள் சேர்க்கணும்
நன்கு பழகிடல் செய்யணும்
ஐந்து புலன்கள் அடக்கணும்
ஐயம் தெரிந்து நடக்கணும்
ஆறு சுவைகளும் உணரணும்
ஆறுதல் கூறிட முந்தணும்
-
ஏழு வண்ணமய வாழ்க்கையை
எண்ணிய திட்டம் வடிக்கணும்
எட்டு வைத்தே நடக்கணும்
எட்டாக் கனியைப் பறிக்கணும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.