அபூர்வ சகோதரர்கள்!
பிறந்தோம்.. வளர்ந்தோம்.. படித்தோம்.. வேலைக்கு போனோம்.. சம்பாதித்தோம்.. ஓய்வெடுத்தோம்.. என்று கால ஓட்டத்தில் கரைந்து செல்லும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் வித்தியாசமான சிந்தனையுடன் கிராமப்புற மாணவர்
பிறந்தோம்.. வளர்ந்தோம்.. படித்தோம்.. வேலைக்கு போனோம்.. சம்பாதித்தோம்.. ஓய்வெடுத்தோம்.. என்று கால ஓட்டத்தில் கரைந்து செல்லும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் வித்தியாசமான சிந்தனையுடன் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை பெற்றுத்தரும் வழிகாட்டியாகச் செயலாற்றி வருகின்றனர் சகோதரர்கள் இருவர்.
இவர்களால் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்று கைநிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் பலர்
இவர்கள் இருவரையும் பாராட்டி அண்மையில் கடையத்தில் விழா எடுத்தனர். அந்த அபூர்வ சகோதரர்கள் கே.எம்.சண்முகம் மற்றும் கே.எம்.பெருமாள் குறித்து அறிய கடையம் சென்று அவர்களைச் சந்தித்தோம். இனி... கே.எம்.சண்முகம் தொடர்கிறார்.
""திருநெல்வேலி மாவட்டம், கடையம்தான் எங்கள் ஊர். எனது தந்தை மீனாட்சிசுந்தரம் இங்குள்ள சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசின் நல்லாசிரியர் விரு தும் பெற்றவர். தாய் கல்யாணி குடும்பத் தலைவியாக இருக் கிறார்.
நாங்கள் படித்தது எல்லாம் கடையம் சத்திரம் பாரதி மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில்தான். நான் எம்.எஸ்.சி. எம்.எம்.எம் படித் துள்ளேன். என் சகோதரன் பெருமாள் எம்.பி.ஏ. மற்றும் பல மென்பொருள் தொழில் நுட் பங்களை பயின்றுள் ளார்.1988ல் நான் மும்பையில் (பாம்பே) வேலை பார்த்தேன். அப்பொழுது முதல் இந்தப் பணியைச் சேவையாக செய்து வருகிறேன்.
1993ல் கோயம்புத்தூர் கிளையின் அதிகாரியாக மாறிய பொழுது நன்கு படித்த கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்தேன். ஆனால், கிராமப்புற மாணவர்கள் கம்யூனி கேஷன் ஸ்கில் மற்றும் ஆங்கிலப்புலமை இல்லாமல் சிரமப்படுவதை உணர்ந்தேன். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள பயிற்சி வழங்க முடிவு செய்தேன்.
கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்குகிறோம். கிராமப்புறக் கல்லூரிகளில் ஆய்வகங்கள் இருக்கும். ஆனால் பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் புரா
ஜெக்டிற்காக ஆய்வுகளை செய்ய சிறப்பு உபகரணங்கள் இருக்காது.
இது போன்ற சிறப்பு டெக்னாலஜி தேவைப்படும் கல்லூரிகளுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கி வழிகாட்டி வருகிறோம்.
மேலும் ஆய்வக உதவியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். இருவரும் சேர்ந்து சுமார் 300 பேர் வேலை பெறுவதற்கு வழிகாட்டியுள்ளோம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ஒரு நிறுவனத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். அனைத்து வித தொழில்களுக்கும் ஆலோசனை வழங்கும் மையமாகவும் இது செயல்பட வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டுள்ளேன்.