ஞாயிறு கொண்டாட்டம்

தன்​னம்​பிக்​கை​யின்​ மறு​பெ​யர் மாலதி

தன் னம் பிக் கை யின் மறு பெயர் மாலதி கிருஷ் ண மூர்த்தி ஹொல்லா. பத் மஸ்ரீ, அர் ஜுனா, ஏக லைவா உள் ளிட்ட 15 விரு து க ளு டன், ஷாட் புட், டிஸ் கஸ் மற் றும் 100 மீ, 200 மீட் டர் தூர பந் த யங் க ளி லும் பங்

ஏ. பேட்ரிக்

ன் னம் பிக் கை யின் மறு பெயர் மாலதி கிருஷ் ண மூர்த்தி ஹொல்லா. பத் மஸ்ரீ, அர் ஜுனா, ஏக லைவா உள் ளிட்ட 15 விரு து க ளு டன், ஷாட் புட், டிஸ் கஸ் மற் றும் 100 மீ, 200 மீட் டர் தூர பந் த யங் க ளி லும் பங் கேற்று 312 தங் கப் ப தக் கங் கள், 24 வெள் ளிப் ப தக் கங் கள், 7 வெண் கல பதக் கங் கள் வென்ற சர் வ தேச வீல் சேர் சாம் பி யன் மாலதி ஹொல்லா!

உடல் ஊன முற் ற வர் களை அவ் வாறு அழைப் ப தை விட மாற் றுத் தி ற னா ளி கள் என்றே அழைக்க வேண் டு மென ஐக் கிய நாடு கள் சபை அறி வித் துள் ளது. இந்த மாற் றுத் திற னா ளி க ளில் ஒரு சாம் பி ய னாக திகழ் வ தோடு, தன் னைப் போன்ற மாற் றுத் திற னா ளி க ளுக் கும் தன் ன ல மற்று உதவி வரு கி றார் மாலதி ஹொல்லா.

தமிழ், கன் ன டம், தெலுங்கு, ஆங் கி லம், ஹிந்தி மற் றும் உருது உள் ளிட்ட 13 மொழி க ளைப் பேசும் மாலதி ஹொல் லா வைப் பற்றி அ ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற் நல்ண்ழ்ண்ற் என்ற தலைப் பில் ஆங் கி லப் புத் த கத்தை மணி பா லின் "இன்ஸ் பை யர்ட் இந் தி யன் ஃப வுண் டே ஷன்' பதிப் ப கம் வெளி யிட் டுள் ளது. உத கை யி லுள்ள கிர சண்ட் பள் ளி யின் ஆண்டு விழா வில் சிறப்பு விருந் தி ன ராக பங் கேற் ப தற் காக வந் தி ருந்த மாலதி நம் மி டம் பேசி யதி லி ருந்து...

""நமக் கெல் லாம் நமது பெற் றோர் கள் தான் முதல் ஆசி ரி யர் கள். நமது எதிர் கா லத்தை நிர் ண யிக் கும் சக்தி அவர் கள் தான். அனை வ ரின் வாழ்க் கை யி லும் மேடு பள் ளங் கள் இருக் கும். ஆனால், அவற்றை கடக்க ஒரு வழி யை யும் கட வுள் திறந்து வைத் திருப்பார். எப் ப டிப் பட்ட சோத னை கள் வந்த போதி லும் அதை எதிர் கொள் ளும் மனோ பா வம் நமக்கு உரு வாக வேண் டும்.

எல்லா குழந் தை க ளும் ஒவ் வொரு திறமை கொண் ட வர் க ளாக இருப் பர். அவற்றை சரி யாக வெளிக் கொ ண ரும் ஆற் றல் பெற் றோ ருக்கு வர வேண் டும். ஏதோ ஒரு வகை யில் சாதிக்க வேண் டு மென்ற லட் சி யம் மிக அவ சி யம். லட் சி யத்தை அடை யும் வரை பின் வாங் கக் கூ டாது என்ற எண் ணம் அனை வ ரி டத் தி லும் வர வேண் டும். அப் போ து தான் நாம் சாத னை களை தொடர முடி யும்.

நான் பிறந் தது கர் நா டக மாநி லம் பெங் க ளூ ரு வில். ஒன் றரை வய தி ருக் கும் போது எனக்கு வந்த வைரஸ் காய்ச் ச லால் எனது உடல் பக் க வா தத் தால் பாதிக் கப் பட் டது. அதைத் தொ டர்ந்து எனக்கு அளிக் கப் பட்ட சிகிச் சை க ளால் இடுப் புக்கு மேல் சரி யா னதே தவிர, கால் பகு தி கள் முற் றி லும் செய லி ழந் தது. அத் து டன் என் னால் பேசக் கூட முடி யாத நிலை ஏற் பட் டது. ஐந்து வயது வரை இந் நிலை நீடித் தது. அதன் பின், எனக்கு நடத் தப் பட்ட இரண்டு அறுவை சிகிச் சை க ளின் மூலம் பேச் சுத் தி றன் வந் தது.

ஆறா வது வய தில் சிகிச் சைக் காக சென் னை யி லுள்ள ஒரு தனி யார் இல் லத் தில் சேர்ந்த நான் அங் கேயே சிகிச் சையை பெற் ற தோடு, கல் வி யை யும் தொடர்ந் தேன். சுமார் 15 ஆண் டு கள் சென் னை யில் எஸ் எஸ் எல்சி வரை படித் து விட்டு, பியூசி படிப் ப தற் காக கர் நா ட கத் துக்கு திரும் பிச் சென் றேன். என் னு டைய ஊனத்தை மறந்து தன் னம் பிக் கை யோடு செயல் பட்ட எனக்கு விளை யாட்டு பெரும் துணை யாக அமைந் தது. இதற்கு என் னு டைய ஆசி ரி யர் கள் கொடுத்த ஊக் க மும் ஒரு கார ணம். அதன் பின் னர் கடந்த 1975ம் ஆண் டில் பெங் க ளூ ரு வில் நடத் தப் பட்ட கர் நா டக மாநில அள வி லான விளை யாட்டு போட் டி க ளில் மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான பிரி வில் 4 போட் டி க ளில் பங் கேற்ற நான் 2 தங் கப் பதக் கங் க ளை யும், 2 வெள் ளிப் பதக் கங் க ளை யும் வென் றேன். என் னு டைய விளை யாட் டுத் திற மை யின் கார ண மாக கர் நா டக மாநி லத் தில் சிண் டி கேட் வங் கி யி லேயே எனக்கு வேலை வாய்ப்பு அளிக் கப் பட் டது. தற் போது பெங் க ளூ ரு வில் சிண் டி கேட் வங்கி மேலா ள ராக பணி யி லி ருக் கி றேன்.

வாழ்க் கையே ஒரு போராட் டம் தான். அதில் உடல் திறன் குறைந் த வர் கள் இன் னும் சற்று கூடு த லா கப் போராட வேண் டும். இந் தப் போராட் டக் குணம் எனக் கி ருந் த தால் தான் மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான ஒலிம் பிக் விளை யாட் டுப் போட் டி க ளில் இந் தி யா வின் சார் பில் பல நாடு களி லும் என் னால் பங்கு பெற்று வெற்றி பெற மு டிந் தது. கடந்த 1992ம் ஆண் டில்  நடை பெற்ற மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான ஆசிய விளை யாட்டு போட் டி க ளில் இந் தி யா வின் சார் பில் பங் கேற்ற அணிக்கு தலை மை யும் தாங் கி னேன்.

என் னைப் போன்ற மாற் றுத் திறன் படைத் த வர் க ளுக் கும், விளை யாட் டில் ஆர் வ மாக இருப் ப வர் க ளுக் கும் உத வும் வகை யில் "மாத்ரு ஃப வுண் டே ஷன்' என்ற அமைப் பை யும் பெங் க ளூ ரு வில் தொடங் கி யுள் ளேன். இந்த அமைப் பில் சர் வ தேச கிரிக் கெட் வீரர் கள் சையது கிர் மானி, வெங் க டேஷ் பிர சாத், தட கள வீராங் கனை அஸ் வினி நாச் சப்பா ஆகி யோ ரும் இடம் பெற் றுள் ள னர்.

தற் போது இந்த ஃப வுண் டே ஷ னில் என் னைப் போன்ற மாற் றுத் தி றன் கொண்ட ஏழை குடும் பங் க ளைச் சேர்ந்த 16 இளை ஞர் க ளுக்கு கல்வி மற் றும் மருத் துவ சிகிச் சை களை அளித்து அடைக் க லம் கொடுத்து வரு கி றேன். இந்த அமைப்பை மேலும் விரி வு ப டுத்தி இதில் மாற் றுத் தி றன் கொண்ட பெண் குழந் தை க ளை யும் இணைத் துக் கொள்ள திட் ட மிட் டுள் ளேன். இதற் கான முயற் சி கள் நடை பெற்று வரு கின் றன.

மாற் றுத் திற னா ளி கள் விளை யாட்டு போட் டி க ளில் பங் கேற் ப தற்கு வயது வரம்பு இல் லா த தால் அவர் கள் உடல் திற னைப் பொறுத்தே தெரிவு செய் யப் ப டு கின் ற னர். அத னால் தான் என்னை இப் போ தும் ஃபிட் டாக வைத் தி ருக் கி றேன்'' என் றார் ஆரோக் கி ய மான புன் ன கை யு டன் மாலதி ஹொல்லா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT