முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆசிய அசத்தல்!

சீனாவின் குவாங்ஜௌ நகரில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் கபடி அணி, தங்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளது. அந்தத் தேசிய அணியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றவர் ஒரே

ஞாயிறு கொண்டாட்டம்

ஆசிய அசத்தல்!

சீனாவின் குவாங்ஜௌ நகரில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் கபடி அணி, தங்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளது. அந்தத் தேசிய அணியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றவர் ஒரே

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:26 PM
பகிர்:

சீ னாவின் குவாங்ஜௌ நகரில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் கபடி அணி, தங்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளது. அந்தத் தேசிய அணியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றவர் ஒரே ஒரு வீராங்கனை கவிதா.

தமிழக சிறப்புக் காவல்படை 5}வது பட்டாலியனில் பணிபுரியும் கவிதாவை அவரது வீட்டில் சந்தித்தோம். தங்கம் வென்ற மகிழ்ச்சி அவரது முகத்தில் பொங்கி வழிகிறது.  இடைவிடாமல் அலைபேசியில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவருடன்

பேசினோம்.

கபடியில் ஆர்வம் வந்தது எப்படி?

நான் ஆவடியில் உள்ள ஐஎச்எம் பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் ஏராளமான கபடி வீராங்கனைகள் உள்ளனர். அவர்களைப் பார்த்து எனக்கும் கபடி மீது ஆர்வம் வந்துவிட்டது.

7-ம் வகுப்பு படிக்கும்போதே அதாவது 12-வது வயதிலிருந்தே கபடி விளையாடத் துவங்கிவிட்டேன். பள்ளி அளவிலான கபடியிலிருந்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகள் என வளர்ந்து இப்போது ஆசிய விளையாட்டிலும் வெற்றி பெற்றுவிட்டோம்.

கபடியில் உங்களது நிலை என்ன..?

கபடிப் போட்டி விளையாடுவோருக்கு உடல் வலிமையும் தந்திரமும் முக்கியம். கபடிப் போட்டியில் அஃபன்ஸ், டிஃபன்ஸ் என்ற இரு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் சிறப்பாக செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அது இரண்டையும் சரியாகச் செய்து வருகிறேன்.

கபடியில் மகத்தான ஒரு சாதனை புரிந்திருக்கிறீர்கள். இப்படி ஒரு சாதனையைச் செய்வோம் என்று எதிர்பார்த்தீர்களா?

முதல்முறையாக மகளிருக்கான கபடி போட்டிகள் சீனாவில் தற்போது நடந்த குவாங்ஜௌ ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் சேர்க்கப்பட்டது. முதல்முறையாக கபடி சேர்க்கப்பட்டுள்ளதால் எப்படியும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கினோம்.

நாங்கள் திட்டமிட்டு விளையாடியதால் வெற்றி கிடைத்தது. 1990-ம் ஆண்டு ஆடவர் கபடி போட்டி ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் நடந்து முடிந்த ஆசிய போட்டி வரை இந்திய ஆடவர் அணிதான் தொடர்ச்சியாக தங்கம் வென்று வருகிறது. 6 தங்கங்களை இந்திய ஆடவர் அணி இதுவரை ஜெயித்துள்ளது.

ஆடவர் அணியைப் போலவே மகளிர் கபடி அணியும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.



ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அனுபவம் குறித்து...?

ஆசிய விளையாட்டுப் போட்டி நாங்கள் நினைத்தது போல சுலபமாக இல்லை. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தங்கத்தை வென்றுவந்தோம். அரை இறுதியில் ஈரான் அணியினர் எங்களுக்கு மிகுந்த சவாலை

அளித்தனர்.

ஆனால் எங்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தால் நாங்கள் அரை இறுதியில் ஈரானைத் தோற்கடித்தோம். இறுதிச் சுற்றில் தாய்லாந்தை  வென்றோம். தங்கம் வென்றபோது எங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றுவிட்டோம்.

நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. தொடர்ந்து இந்தியா வெற்றிகளைப் பெறவேண்டும். இதற்காக உழைக்கவேண்டும் என்பதைத்தான் இந்த வெற்றி எங்களுக்கு உணர்த்துகிறது.'

நீங்கள் இதுவரை பங்கேற்ற போட்டிகள்...

வெற்றிகள்?

இதுவரை ஏராளமான மாநில, தேசிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம். 2-வது ஏஷியாட் கபடிப் போட்டிகள் ஈரானில் நடந்தபோது இந்திய அணிக்கு நான் துணை கேப்டனாக இருந்தேன். அப்போது இந்தியா தங்கம் வென்றது.

மதுரையில் நடந்த 3-வது ஏஷியாட் கபடிப் போட்டியின்போது இந்தியா தங்கம் வென்றது. அப்போது அணிக்கு கேப்டன் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். டாக்காவில் நடந்த 4-வது ஏஷியாட் போட்டியின்போது இந்தியா தங்கத்தைத் தட்டி வந்தது.

ஏஷியாட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளிலும் தேசியப் போட்டிகளிலும் தமிழக அணி தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. தமிழக அணிக்கு பல முறை கேப்டன் பொறுப்பு வகித்துள்ளேன். இந்திய அணிக்கு 2008-ம் ஆண்டில் கேப்டன் பொறுப்பை வகித்தேன். அப்போதுதான் 3-வது ஏஷியாட் போட்டியில் பதக்கம் வென்றோம்.



எதிர்காலத் திட்டம் என்ன?

தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி அதிக பதக்கங்களைக் குவிக்கவேண்டும் என்பது எனது ஆசை. இதை கண்டிப்பாகச் செய்வேன். தொடர்ச்சியாக பதக்கம் வெல்பவர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கெüரவித்து வருகிறது. அர்ஜுனா விருதை வெல்லவேண்டும் என்ற ஆசை உண்டு.

முழு கட்டுரையைப் படிக்க →