முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஸ்கேட்டிங் ஆரத்தி!

சென்னையை அடுத்த மதுரவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலையில் அதிகாலை நேரத்தில் சர்...சர் என ரோலர் ஸ்கேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு சிறுமி. ரோலர் ஸ்கேட்டிங்கில் அவரது அசாத

ஞாயிறு கொண்டாட்டம்

ஸ்கேட்டிங் ஆரத்தி!

சென்னையை அடுத்த மதுரவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலையில் அதிகாலை நேரத்தில் சர்...சர் என ரோலர் ஸ்கேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு சிறுமி. ரோலர் ஸ்கேட்டிங்கில் அவரது அசாத

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:50 PM
பகிர்:

சென்னையை அடுத்த மதுரவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலையில் அதிகாலை நேரத்தில் சர்...சர் என ரோலர் ஸ்கேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு சிறுமி. ரோலர் ஸ்கேட்டிங்கில் அவரது அசாத்திய வேகமும், வளைவுகளில் லாகவமாக திரும்பும் விதமும் அவரை "கால்'தேர்ந்த நிபுணர் என்றே காட்டுகின்றன.

வாகனங்களுக்கு இணையான வேகத்தில் ரோலர் ஸ்கேட்டிங்கில் ஈடுபடும் அந்த ஸ்கேட்டிங் வீராங்கனை யார் என்று அருகில் சென்று பார்த்தபோது அவர் ஆரத்தி கஸ்தூரிராஜ். சீனாவில் நடைபெற்ற 13-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 10-வது இடம் பிடித்த சாதனைச் சிறுமி.

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் ஆரத்தி. தந்தை கஸ்தூரிராஜ். தாயார் டாக்டர் மாலாராஜ். ரோலர் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஆரத்தி. 2001-ல் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கிய ஆரத்தி 61 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.

தேசிய, சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். தேசிய அளவில் ஒரு சிலர் மட்டுமே ரோலர் ஸ்கேட்டிங்கில் பிரகாசித்து வருகின்றனர். அவர்களுள் தமிழக வீராங்கனை ஆரத்திக்கு முதலிடம் உண்டு. அவருடன் ஒரு பேட்டி:

இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத ரோலர் ஸ்கேட்டிங்கை நீங்கள் தேர்ந்தெடுத்தது ஏன்?

எனக்கு அதிகம் பிடித்தது இந்த ரோலர் ஸ்கேட்டிங்தான். சிறுவயதில் டி.வி.யில் இந்த விளையாட்டைப் பார்த்து எனக்கு அதிகம் பிடித்துவிட்டது. அதனால்தான் அதிகம் இந்தியாவில் பிரபலமாகாதபோதும் ஈடுபாடு காரணமாக அதில் பயிற்சி பெற்று சாதித்து வருகிறேன்.

உங்கள் கால்கள் என்ன சக்கரமா? வாகனங்களுக்கு இணையான வேகத்தில் ஸ்கேட்டிங் செய்கிறீர்களே எப்படி?

முறையான பயிற்சியும், மனதில் தெம்பும் இருந்தால் முடியாத காரியம் எதுவுமில்லை. துவக்கத்தில் பயமாக இருந்தது. ஆனால் ஸ்கேட்டிங்கில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் பயிற்சி பெற்று வருவதால் பயம் போய்விட்டது. இன்னும் வேகமாக ஸ்கேட்டிங் செய்ய பயிற்சி பெற்று வருகிறேன்.

எத்தனையோ சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும், நீங்கள் கடினமான போட்டியாக கருதியது எது?

ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டாலும் 2007-ல் தைவானில் நடந்த ஷார்ட் டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியைத்தான் நான் கடுமையானதாக கருதுகிறேன்.

இருந்தபோதிலும் அதில் 2 தங்கம் வென்றேன்.

பயிற்சி நேரம்?

தினமும் காலை 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் தீவிர பயிற்சி. நேரு விளையாட்டு அரங்கம், மதுரவாயல் அருகேயுள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய சாலையில் பயிற்சி செய்வேன். வீட்டிலேயே உள்ள உடற்பயிற்சிக் கூடத்திலும் பயிற்சி செய்வேன்.

பயிற்சிக்காக விசேஷ உணவை எடுத்துக் கொள்வீர்களா?

விசேஷ உணவு என்று எதையும் சாப்பிடுவதில்லை.

ஆனால் போட்டிக்காக வெளிநாடு செல்லும்போது சமையல் நிபுணரை உடன் அழைத்துச் செல்வேன்.

பயிற்சியாளர்?

என்னுடைய பயிற்சியாளர் ஸ்ரீகாந்த்ராவ். அவர் மைசூரில் இருக்கிறார். இதற்காக நான் மாதம் ஒருமுறை மைசூர் சென்று பயிற்சி பெறுவேன். எனக்கு முழு ஊக்கம் அளித்து என்னைத் தயார் செய்பவர் அவரே. மேலும் கொரியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குச் சென்று சர்வதேச பயிற்சியாளர் டபிள்யூ.ஜி. பார்க்கிடம் பயிற்சி பெற்று வருகிறேன். நான் போட்டிகளில் பங்கேற்பதற்காக எனது பள்ளி முதல்வர் அஜித் பிரசாத் ஜெயின், ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நான் எங்கு சென்றாலும் எனது தந்தை கஸ்தூரிராஜ் உடன் வந்துவிடுவார். தாய், தந்தையின் முழு ஆதரவால்தான் நான் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்துள்ளது.

ஸ்கேட்டிங் பயிற்சியில் பல்வேறு வகைகள் உள்ளதா?

ஆம். நான் தற்போது ரோலர் ஸ்கேட்டிங், ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறேன். ஐஸ் ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெறுவதற்காக விசேஷ ஷூக்களை வெளிநாட்டிலிருந்துதான் தருவிக்கவேண்டும். இதன் விலை ரூ.1.5 லட்சத்துக்கும் மேல். அதிலுள்ள பிளேடுகள் தேய்ந்து விட்டால், அதை கூர்மையாக்குவதற்கும் தனி கருவி உள்ளது. சில முறைகள் மட்டுமே ஷூவை கூர்மையாக்க முடியும்.

அதன் பின்னர் புதிய ஷூதான் வாங்கவேண்டும்.

உங்களது அடுத்த இலக்கு?

சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதிக்கவேண்டும். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் பெற்றுத் தரவேண்டும். இதுதான் எனது இலக்கு. அதை நிச்சயம் செய்து முடிப்பேன்.

முழு கட்டுரையைப் படிக்க →