நீ லகிரி... இந்த வார்த்தை தற் போது சுற்றுலா வுக்கு வருபவர்க ளால் உரு வாக்கப்பட்ட புதிய சொல்லல்ல. சேரன் செங் குட்டுவன் கண்ண கிக்குச் சிலை அமைக்க கல் எடுப்பதற் காக இமயம லைக்கு சென்ற போதே நீல கிரி பற் றிய குறிப் பும் இடம் பெற் றுள் ளது.
அவன் நடந்து சென்ற பாதையே சேரங் கோடு என வும், இளைப்பாறுவதற் காக பாடி அமைத்த இடமே சேரம் பாடி என வும், அங்கி ருந்த அவன் பார்த்த மலைத்தொடர்கள் நீல நிறத் தில் தென்பட்ட தால் இப்பகு தியை நீல கிரி என அழைத் ததாக வும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன.
அத னால் நீல கிரி மலை சுற் றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் மட்டுமல்லாமல் சரித் திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வும் உள்ளது.
இதற்கு ஆதார மாக நீல கிரி மாவட் டத் தில் பல் வேறு இடங்க ளில் தென்ப டும் வீரக்கற்கள் எனப்ப டும் நடுகற்களைக் குறிப்பிட லாம். நீலகிரி யின் வடக்கு மற் றும் வட மேற்கு பகு திக ளில் தெங்குமர ஹாடா, மங்கலப்பட்டி, சிறி யூர், ஆனைக்கட்டி, மாயார், மசின குடி, தெப்பக் காடு ஆகிய பகுதிக ளோடு கர்நாடக மாநிலத் தின் எல் லைப் பகுதிகளி லும் இந்த வீரக்கற்கள் காணப்படு கின்றன.
இந்த வீரக்கற்களின் பின்னணி சுவாரஸ்யமானது.
கிராம மக்களை யும், கால்நடைகளை யும் எதிரிகளிடமி ருந்தோ, விலங்குகளிடமி ருந்தோ காப் பாற்றுவதற்காகப் போராடி உயிர் நீத்த வீரர்க ளுக் காக அமைக்கப்படுவதா கும். அந்த வீரர் இறந்த இடத் திலோ அல்லது இறந்த வீர ரின் கிரா மப்பகுதி யிலோ அந்த வீரக்கற்கள் அமைக்கப்ப டும்.
இந்த வீரக்கற்க ளைக் குறித்து தனி யாக ஆய்வு செய்த சிபிஆர் பவுண்டேசன் அமைப் பின் நீல கிரி மாவட்ட கள அலு வலராகப் பணி யாற் றும் எம்.குமார வேலு நம்மிடம் தெரி வித்த மேலும் பல சுவை யான தகவல்கள் இதோ...
""நீல கிரி மாவட் டம் சரித் திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியா கும். சோழர்கள், சேரர்கள், கொங்கு அரசர்கள், கடம்பர், கங்கர், ஹொய்சாளர், உடை யார், நாயக்கர் ஆகியோரது கட் டுப் பாட் டில் இப்ப குதி இருந் துள்ளது. இதில் 12, 13 மற் றும் 14ம் நூற் றாண்டுக ளில் விஜயநகர பேரரசு மற் றும் ஹொய் சால மன்னர்க ளின் ஆட் சிக்காலத் தில் நடப்பட்ட வீர க்கற் களே அதிகள வில் காணப்படு கின்றன.
இவை சில இடங்க ளில் 4 நிலைக ளில் புடைப்பு சிற்ப்பங்களாக வும், சில இடங்க ளில் முப்பரி மாண வடிவி லும் காட்சிய ளிக் கின்றன. சில பகுதிக ளில் இந்த வீரக்கற்க ளுக்கு அரு கில் வட்டெ ழுத்துக ளைக் கொண்ட கல் வெட்டுக ளும் உள்ளன. ஆனால், அரிமானத் தால் இவை தேய்ந்து விட்ட தால் அவற்றை முழுமை யாகப் படிக்க முடிவ தில்லை.
இத்த கைய வீரக்கற்கள் கோத்தகிரி யில் பணகுடி சோலை, அவ் வூர் போன்ற பகுதிக ளில் சித் திர வடி வில் காணப்படு கின்றன. கிராமப்பகுதிகளை யொட்டி யுள்ள சில வீரக்கற்கள் வழி பாட்டு தலங்களாக வும் காணப்படு கின்றன. இந்த வீரக்கற்க ளுக்கு மேற்பகுதி யில் சிவ லிங் கம் பொறிக்கப்பட் டுள்ள தால் இவை சிவனு டைய வழி பாட்டுத் தலங்க ளாக கணக்கிலெ டுக்கப்பட் டுள்ளன.
குறிஞ்சி நிலப்பரப்பு மிக முக்கியமானதா கும்.
இம்மலையை யொட்டி யுள்ள பகுதிக ளில் பவானிசாக ரில் தண்டல் நாயக்கர் கோட்டை, அல்லி ராணி கோட்டை, நெம்பாலக் கோட்டை, பக்காசரன் கோட்டை, மலைக் கோட்டை ஆகிய பகுதிகள் இன்ன மும் இருப்ப தால் நீல கிரி மலைப் பகுதி யைப் பல் வேறு குறு நில மன்னர்க ளும் ஆட்சி செய்தி ருப்பதற் கான வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இந்த வீரக்கற்கள் நடப்பட்டி ருக்க லாம் என வும் தெரி கிறது. வனவிலங்குக ளோடு மோதி அவற் றைக் கொன்று ஊரைக் காப் பாற்றி உயிர் நீத்த வீரர்க ளுக் குத் தனி யாக புலிக்கல் அல்லது பன் றிக் குத்திகல் என்ற வீரக்கற்க ளும் வைக்கப்பட் டுள்ளன.
நீல கிரி மாவட் டத் தில் காணப்ப டும் வீரக்கற்க ளில் சின்ன குன் னூர் பகுதி யில் காணப்ப டும் வீரக்கற்கள் 3 அல்லது 4ம் நூற் றாண் டைச் சேர்ந்தவை யாக இருக்க லாம் எனக் கண்டறியப்பட் டுள்ளது. அத்துடன் மேலூர் பகுதி யில் காணப்ப டும் வீரக்கற்கள் காலத் தால் பிற்பட்டவை. ஆங்கிலேய ருக்கு எதிராகவோ அல்லது ஆங்கிலேயருடன் சேர்ந்தோ போரிட்டு வீர மரணம் அடைந்தவர்க ளுக் காக வைக்கப்பட்டவை.
நீல கிரி மாவட் டத் தில் பல் வேறு காலகட்டங்க ளைச் சேர்ந்த சுமார் 180 வீரக்கற்கள் காணப்படு கின்றன. இந்த வீரக்கற்க ளில் அந்த வீர ரின் உரு வம், அவரது துணைவி யாரின் உருவம், மற் றொரு வீர னோடு போரி டும் காட்சி அல் லது வனவிலங் கோடு போரி டும் காட்சி, சிவலோகம் செல்லுதல், சிவலோகத் தில் அமர்ந்தி ருத்தல் போன்ற காட்சிகள் காணப்படு கின்றன. சில கற்க ளில் நாய் உருவ மும் காணப்படுவ தால் அந்த வீர ரோடு அந்த நாயும் சேர்ந்து இறந் தி ருக்க வேண்டு மெனத் தெரிகிறது.
இத்த கைய வீரக்கற்கள் நமது அரிய பொக்கிஷங்கள் என்ப தால் அவற் றைப் பாது காக்க வேண் டும். இதற் கான நடவ டிக்கைகளை அர சின் உத வி யோடு தொல்லியல் துறை மேற் கொள்ள வேண் டும். கேரள மாநிலத் தில் அம்பலவயல் என்ற இடத் தில் வீரக்கற்க ளுக்காகவே தனி யாக அருங் காட்சியகம் ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. அத்த கைய நடவ டிக்கைகளை நீல கிரி மாவட் டத்தி லும் மேற் கொள்ள வேண் டும்'' என்கி றார் குமார வேலு.
ஆவணங்கள், நமது சாதனைக ளைப் பறை சாற் றும் முக் கிய சரித்திரப் பொக்கிஷங்கள்.
நீல கிரி மாவட் டத் தில் காணப்ப டும் அரிய வர லாற் றுத் தட யங்க ளைப் போற் றிப் பாது காக்க உரிய நடவ டிக்கைகள் எடுக்கப்பட வேண்டு மென்பதே நமது விருப்பமும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.