தன்னுடைய 17-வது வயதில் "அபூர்வா' மலையாளப் படத்தை இயக்கி கேரளப் படவுலகினரோடு மற்ற படவுலகினரையும் வியக்க வைத்தவர் இயக்குநர் நித்தின் ராமகிருஷ்ணன், தமிழ் இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த அடிப்படையில் சங்க இலக்கியப் பாடல்களில் வெளிப்பட்ட பரதநாட்டியக் கலை குறித்து "உமா மகேஸ்வரம்' என்ற தமிழ்ப் படத்தை எடுக்கிறார்.
இந்தப் படத்தில் 2008-ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் வென்ற பார்வதி ஓமனக்குட்டன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவருக்குப் பரதநாட்டியக் குருவாக நடிக்க சிம்ரனிடம் பேசியிருக்கிறார். கதையைக் கேட்ட சிம்ரன் உடனே நடிக்க சம்மதித்துள்ளார். ஆனாலும், தான் இன்னும் முன்னணி நடிகை என்ற பழைய நினைவிலேயே சம்பள விஷயத்தில் கடும் கறார் காட்டியிருக்கிறார். இதனால் இயக்குநர், நதியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தகுதிக்கு மீறிய சம்பளம் கேட்டே இழந்து வருகிறார் சிம்ரன் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்கூட வருத்தம் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.