கூடையில் விழம் விருதுகள்!
பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம், பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்பு, மாநில அளவிலான போட்டிகளில் சாம்பியன், தென் மண்டல பள்ளிகளுக்கு இடையிலான சாய்ஸ் கூடைப்பந்துப் போட்டியில
ஞாயிறு கொண்டாட்டம்கூடையில் விழம் விருதுகள்!
பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம், பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்பு, மாநில அளவிலான போட்டிகளில் சாம்பியன், தென் மண்டல பள்ளிகளுக்கு இடையிலான சாய்ஸ் கூடைப்பந்துப் போட்டியில
பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம், பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்பு, மாநில அளவிலான போட்டிகளில் சாம்பியன், தென் மண்டல பள்ளிகளுக்கு இடையிலான சாய்ஸ் கூடைப்பந்துப் போட்டியில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடம் எனப் பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை எஸ். தீபிகா. அவர் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எந்த வயதிலிருந்து கூடைப்பந்து விளையாடி வருகிறீர்கள்?
எனக்கு 9 வயதாக இருக்கும்போதே கூடைப்பந்து விளையாடத் துவங்கிவிட்டேன். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் எப்போதும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தவிர, எனது தாய் அன்புக்கரசி, பள்ளியில் படிக்கும்போது கூடைப்பந்து விளையாடியவர். அவருடைய ஆர்வம் எனக்குத் தொற்றிக் கொண்டது. மேலும் பள்ளி விளையாட்டுகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவார்கள். அதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது.
உங்கள் பயிற்சி முறைகள் பற்றிச் சொல்லுங்கள்?
தினமும் பள்ளி முடிந்ததும் பள்ளி வளாகத்திலேயே மாலை 3.30 முதல் 6 மணி வரை இடைவிடாத பயிற்சி. பயிற்சியாளர் சபியுல்லாவின் மேற்பார்வையில் கூடைப்பந்து பயின்று வருகிறேன்.
இப்போதும் அவர்தான் எனக்குப் பயிற்சியாளர். பந்தை பாஸ் செய்வது, கூடைக்குள் லாகவமாகச் செலுத்துவது என்பதை அவர்தான் கற்றுத் தந்தார். பல டெக்னிக்கல் விஷயங்களையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். அடிக்கடி வெளிமாநிலங்களில் சென்று விளையாடும்போது சக வீராங்கனைகள், எதிரணி வீராங்கனைகளிடமிருந்தும் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
இதுவரை பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள்?
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 6 முறை பங்கேற்று எங்கள் அணி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறது. ஒருமுறை 2-வது இடமும் மற்றொரு 3-வது இடத்தையும் கைப்பற்றினோம். சென்னையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான லேடி ஆண்டாள் கூடைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றோம்.
2006-ம் ஆண்டில் தேசிய போட்டியில் சாம்பியன் பட்டத்தை எங்கள் அணி கைப்பற்றியது. சென்னை மாவட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளோம். குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் 2-ம் இடத்தைக் கைப்பற்றினோம்.
13 வயதுக்குட்பட்டோர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் தென் மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே கேரள மாநிலத்தில் நடைபெற்ற சாய்ஸ் விளையாட்டுப் போட்டியில் 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளோம்.
எந்தெந்த அணிகளுக்காக விளையாடி
வருகிறீர்கள்?
தமிழக அணி, சென்னை மாவட்ட அணி, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அணிகளுக்காக விளையாடியுள்ளேன். தொடர்ந்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அணிக்காகப் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
உங்கள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஊக்கம்?
அம்மா அன்புக்கரசி ஏற்கெனவே கூடைப்பந்து விளையாடியவர் என்பதால் என்னை அதிகம் ஊக்கப்படுத்துவார். அப்பா சத்யமூர்த்தி, பிசினஸ்மேன். என்னுடைய படிப்பு, விளையாட்டு இரண்டிற்குமே அவரிடமிருந்து அதிகப் பாராட்டுக் கிடைக்கும்.
பள்ளியிலும் அதிக உற்சாகம் கிடைக்கும். நாங்கள் வெற்றி பெற்றுத் திரும்பும்போது பள்ளித் தாளாளர் குமார ராணி மீனா முத்தையா, பள்ளி முதல்வர் அமுதலட்சுமி, பயிற்சியாளர் சபியுல்லா, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி பரிசு வழங்குவார்கள்.
உங்களுடைய ரோல் மாடல் யார்?
கூடைப்பந்து விளையாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக விளையாடும் கோபி பிரெண்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் போலவே நமது நாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து சென்றுள்ள மூத்த கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் அனைவரையும் பிடிக்கும்.
உங்களுடைய எதிர்காலத் திட்டம்?
தொடர்ந்து சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பெறவேண்டும். சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக வெற்றித் தேடி
தரவேண்டும்.