வெற்றிக்கு வர்ஷா!
எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் புதிய தாரகையாக வலம் வரத் துவங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வர்ஷா சி. சதீஷ். 14 வயதிலேயே ஏராளமான மாவட்ட அளவிலான போட்டிகள், 5 மாநிலப் போட்டிகள், 6 தேசிய போட்ட
ஞாயிறு கொண்டாட்டம்வெற்றிக்கு வர்ஷா!
எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் புதிய தாரகையாக வலம் வரத் துவங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வர்ஷா சி. சதீஷ். 14 வயதிலேயே ஏராளமான மாவட்ட அளவிலான போட்டிகள், 5 மாநிலப் போட்டிகள், 6 தேசிய போட்ட
எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் புதிய தாரகையாக வலம் வரத் துவங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வர்ஷா சி. சதீஷ். 14
வயதிலேயே ஏராளமான மாவட்ட அளவிலான
போட்டிகள், 5 மாநிலப் போட்டிகள், 6 தேசிய போட்டி
களில் வெற்றி வாகை சூடி தேசிய அளவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். பயிற்சி இடைவேளையின் இடையே அவரைச் சந்தித்தோம்.
* மற்ற விளையாட்டுகளிலிருந்து த்ரோபால் சற்று வித்தியாசமானதாயிற்றே. நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?
வாலிபால், பேஸ்கட்பால் போன்றவற்றின் கலவை என்று த்ரோபால் விளையாட்டைச் சொல்லலாம். பந்தை மூவ் செய்து எடுத்துச் சென்று வலையில் வீசவேண்டும். அதுதான் நெட்பால். கொஞ்சம் டெக்னிக். கொஞ்சம் உடல்பலம் இருந்தால் த்ரோபால் விளையாட்டை அட்டகாசமாக விளையாட முடியும். எங்களுடைய தி ஆஷ்ரம் பள்ளியில் இதற்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடம்தான் நான் பயிற்சி பெற்றேன்.
* பயிற்சியாளர்கள் யார்?
பள்ளியில் உள்ள பயிற்சியாளர் கிரி மாஸ்டரிடம் த்ரோபால் பயின்றேன். சென்னை மாவட்ட பயிற்சியாளர்கள் பிரபாகர், ராம்சேகர் ஆகியோரும் பயிற்சியளிக்கின்றனர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடச் செல்லும்போது முத்துக்குமார், விநாயகம், ராஜமாணிக்கம் ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர். இவர்கள் எல்லாம் பயிற்சி அளிக்காவிட்டால் என்னால் இந்த அளவுக்குத் தேசிய போட்டிகளில் விளையாட முடிந்திருக்காது.
பயிற்சி நேரம்?
காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் பயிற்சி பெறுகிறேன். இதனால் உடலும், மனமும் வலுவாகிறது. பயிற்சியில் ஈடுபடாமல் ஒரு நாளும் இருப்பதில்லை. போட்டிக்கு முன்னதாகப் பந்தை சுவற்றில் அடித்து பிராக்டீஸ் செய்வோம். மேலும் பத்து, பதினைந்து முறை மைதானத்தை சுற்றி வந்து வார்ம்அப் பயிற்சி செய்வோம்.
பெற்ற வெற்றிகள்?
திருச்சியில் நடந்த மாநில சப்-ஜூனியர் போட்டி, கரூரில் நடந்த சீனியர் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்து அணிக்கு முதலிடம் பெற்றுத் தந்தேன். கோவையில் நடந்த மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டிக்குத் தலைமையேற்று 2-ம் இடம் பிடித்தோம். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக எனக்குச் சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது. இதை என்னால் மறக்க முடியாது. மேலும் கோவாவில் நடைபெற்ற தேசிய சப்ஜூனியரில் முதலிடம், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியரில் 2-ம் இடம், பஞ்சாபில் நடைபெற்ற தேசிய ஜூனியர் போட்டியில் முதலிடம், சமீபத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய சீனியர் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளேன்.
பெற்ற வெற்றிகளில் சிறந்தது?
கோவாவில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் போட்டியில் மிகவும் போராடி வெற்றி கண்டோம். இந்த வெற்றிக்காக சக வீராங்கனைகளை ஊக்குவித்து போராடி வென்றோம். இதை என்னால் மறக்க முடியாது.
பிடித்த வேறு விளையாட்டு?
த்ரோபால் மட்டுமல்லாமல் பாட்மிண்டனும் விளையாடுவேன். கிரிக்கெட் பார்ப்பதற்குப் பிடிக்கும். அதுவும் சச்சின் ஆடுகிறார் என்றால் டி.வி.யை விட்டு நகரமாட்டேன்.
எதிர்கால லட்சியம்?
தொடர்ந்து தேசிய போட்டிகளில் விளையாடி தேசிய அணியில் இடம்பெறவேண்டும். இதன் மூலம் இந்தியாவுக்குப் பல சர்வதேச போட்டிகளில் விளையாடி அணியின் புகழை உலகம் முழுவதும் பரப்பவேண்டும். இதுதான் எனது எதிர்கால லட்சியம்.
தற்போது விளையாடி வரும் மாநில அணிகளில் சிறந்தது எது?
சிறப்பாக விளையாடி வரும் அணி என்றால் முதலில் தமிழகத்தைச் சொல்லலாம். சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் போட்டிகளில் அதிக அளவு பட்டங்களைத் தமிழக அணி பெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகம், தில்லி அணிகள்.
விளையாட்டு ஓகே... படிப்பில் எப்படி?
விளையாட்டும், படிப்பும் எனக்கு ஒன்றுதான். படிப்பிலும் சுட்டியாகவே இருக்கிறேன். பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்வதுதான் எனது எண்ணம்.