முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குட்டி விஞ்ஞானிகள்!: அறிவியல் மாநாட்டில் அசத்திய குட்டி

சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடபெற்றது. 1914-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் நடைபெற்று வரும் இந்த மாநாடு,

ஞாயிறு கொண்டாட்டம்

குட்டி விஞ்ஞானிகள்!: அறிவியல் மாநாட்டில் அசத்திய குட்டி

சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடபெற்றது. 1914-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் நடைபெற்று வரும் இந்த மாநாடு,

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:18 PM
பகிர்:

சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடபெற்றது. 1914-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் நடைபெற்று வரும் இந்த மாநாடு, உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும்.

இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமர்த்யா சென் உள்பட நோபல் பரிசு பெற்ற இந்தியா மற்றும் பிற நாடுகளின்  விஞ்ஞானிகள் பங்கேற்றனர். மேலும் எம்.எஸ். சுவாமிநாதன், டாக்டர் கஸ்தூரி ரங்கன், மயில்சாமி அண்ணாதுரை உள்பட இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற சுமார் 7 ஆயிரம் விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இவர்கள்  நாட்டின் அடுத்த கட்ட அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிக்கான பல ஆய்வுக்கட்டுரைகளைப் பல்வேறு  அரங்குகளில் நடைபெற்ற கருத்தரங்களில் சமர்ப்பித்தனர்.

அத்தகைய புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொண்ட அமர்வுகளில், இந்தியாவின் கிராமப்புற பள்ளி மாணவர்கள் உள்பட 80 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். தமிழ்நாட்டில் இருந்து 2 மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் நா.லெட்சுமணன், விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் எஸ்.ஜகதீஸ்வரி ஆகியோர் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்றனர். இத்தகைய சிறப்பு மிகுந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது பற்றி,தேசிய அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக் குழுவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளருமான சி.ராமலிங்கத்திடம்

பேசியபோது,

""பல்கலைக்கழகங்கள், பெரிய ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது பயிலும் ஆய்வாளர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களால் கூட மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதை கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேசிய குழந்தை அறிவியல் மாநாடுகள் நிருபித்துள்ளன.

பள்ளி செல்லும் வயதில் உள்ள மாணவர்களைத் தங்கள் வழக்கமான வகுப்பறைகளுக்கு வெளியே கொண்டு வந்து, சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, கண்டறியச் செய்வதே குழந்தைகள் அறிவியல் மாநாடுகளின் நோக்கம்.

இம்மாநாடுகள்  மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டம், ஆய்வு மனப்பான்மை ஆகியவை வளர்க்கப்படுகின்றன. இந்த ஆண்டு நில வளத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம்; எதிர்காலத்துக்காகப் பாதுகாப்போம் என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி முதல் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 5 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த சுமார் 700 இளம் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். அங்கு வந்த ஆய்வுகளிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 2 ஆய்வுக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, 98-வது இந்திய அறிவியல் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவின் சார்பிலும் ஒரு மாணவர் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது என்றார்.'' ராமலிங்கம்.



தங்களின் ஆய்வு பற்றி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வுக்குழு தலைவர் க.மகாலெட்சுமி கூறியது:

""மண்ணின் தன்மைக்கேற்ப மர வகைகளை வளர்த்து, மண் அரிப்பைத் தடுப்பது பற்றிய ஆய்வை எங்கள் பள்ளி ஆசிரியர் எஸ்.சுரேஷ் ராஜ் வழிகாட்டுதலில் நாங்கள் மேற்கொண்டோம். ஆவுடையார்கோவில் பகுதியில் இயற்கையாகவே செழித்து வளரக்கூடிய மர வகைகள் குறித்த விவரங்களைப் பல்வேறு வழிமுறைகளில் கண்டறிந்தோம்.

அதன் பிறகு அரசு புறம்போக்கு நிலங்கள், தனியாரின் தரிசு நிலங்கள், கோயில் நிலங்களில் இந்த மரங்களை வளர்ப்பது பற்றி பிரசாரம் மேற்கொண்டோம். எங்கள் ஆய்வுக் குழுவின் முயற்சியால் இப்போது இணைக்கும் கரங்கள் - மாணவர்கள் மரம் வளர்ப்போர் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

வனத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து அனைவரது உதவியோடும் மரம் வளர்க்கும் இயக்கம் இப்போது எங்கள் ஊரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் எங்கள் குழுவின் சார்பில் நான் கலந்து கொண்டேன். தேசிய அறிவியல் மாநாட்டில் எங்கள் குழு உறுப்பினர் லெட்சுமணன் பங்கேற்றார்.'' என்றார்.

 இந்த மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட மற்றொரு குழுவான விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சர்க்கரை ஆலை கழிவுகள் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்துவது பற்றிய ஆய்வை செய்துள்ளனர்.



இது பற்றி அக்குழுவின் தலைவரான ஆர்.ஹேமாவதி கூறியது:

""ரசாயன உரங்கள், தொழு உரங்கள் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுகள் ஆகியவற்றை தனித்தனியாக மண்ணில் கலந்து, சில தானிய வகைகளை அம்மண்ணில் விதைத்து சோதனை மேற்கொண்டோம். பிற உரங்கள் கலந்த மண்ணில் வளர்ந்த தாவரங்களைவிட, சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்த மண்ணில் தாவரங்கள் செழிப்பாக வளர்வதை எங்கள் ஆய்வில் உறுதி செய்தோம்.

மேலும் மண் பரிசோதனையில் பிற உரங்கள் கலந்த மண்ணைவிட, சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்த மண்ணில், தாவரங்களுக்குத் தேவையான சத்துகள் தேவையான விகிதத்தில் கலந்துள்ளதையும் கண்டறிந்தோம். மேலும் சர்க்கரை ஆலை கழிவுகள் மூலம் மண்ணின் வளத்தைப் பாதுகாக்க முடியும் என்பதையும் எங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தோம்.

தமிழ்நாட்டின் சார்பில் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 30 ஆய்வுக்குழுக்களில் ஒன்றாக நாங்களும் தேர்வானோம். அங்கிருந்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 2 குழுக்களில் எங்கள் ஆய்வுக் குழுவும் ஒன்று.

நான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வைச் சமர்ப்பித்தேன். தேசிய அறிவியல் மாநாட்டில் எங்கள் குழு உறுப்பினர் ஜகதீஸ்வரி பங்கேற்றார். எங்கள் ஆய்வுக்குப் பள்ளி ஆசிரியர் எஸ்.ராமலிங்கம் வழிகாட்டினார்.'' என்றார்.

இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் உள்ளன. எனவே இந்திய நாட்டில் அறிவியல் அறிவுக்குப் பஞ்சமில்லை. எனினும், அறிவியல் பார்வை நமது சமுதாயத்தில் போதுமான அளவு உள்ளதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

இந்நிலையில், குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கும் இத்தகைய அறிவியல் மாநாடுகள் மூலம் நம் நாட்டில் அறிவியல் கண்ணோட்டம் பெருகி வளரும் என்பதில் சந்தேகமில்லை.                                                                 

முழு கட்டுரையைப் படிக்க →