முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இரட்டையர்கள்!

15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த 14 வயதான இரண்டு சிறுவர்கள் கலக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்கிஷண் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில

ஞாயிறு கொண்டாட்டம்

இரட்டையர்கள்!

15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த 14 வயதான இரண்டு சிறுவர்கள் கலக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்கிஷண் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:59 PM
பகிர்:

15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த 14 வயதான இரண்டு சிறுவர்கள் கலக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்கிஷண் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இவர்களது ஆட்ட நுணுக்கங்கள்  அனைவரையும் வியக்க வைத்தன. சென்னையை அடுத்து உள்ள செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் விவேக், முகமது ரியாஸ் ஆகியோர்தான் அந்த இரட்டையர்கள்.

பள்ளி வளாகத்தில் உள்ள பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த  கிரிக்கெட்  மைதானத்தில், வலைப்பயிற்சியில்   ஈடுபட்டிருந்த அவர்களுடன் ஒரு மாலை நேரத்தில் பேசினோம். முதலில் நம்மிடம் பேசத் தொடங்கினார் விவேக். 

""நான் செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். 9 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனக்கு படிப்பு ஒரு கண் என்றால், மற்றொரு கண் கிரிக்கெட்.  வகுப்புகள் முடிந்ததும் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்று விடுவேன். கடந்த ஆண்டு நடந்த எஸ்.ஜே.ஆர்.எஸ். மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான  கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினேன். 

அதுமட்டுமல்லாமல், மாநில அளவிலான செயின்ட் பீட்ஸ் - டான் பாஸ்கோ கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறேன். பள்ளிகளுக்கு இடையேயான ஜெய்கிஷண் மாநிலப்  போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றேன். பேட்டிங்கைவிட, பெüலிங்கில்தான்  அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என் பெற்றோர் சுப்பிரமணியம்-கயல்விழி, பயிற்சியாளர் ஹாரிங்டன் ஆகியோர் எனக்கு மிகவும் உற்சாகம் அளித்து வருகின்றனர். தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்றார். 

அவரைத் தொடர்ந்து, அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் முகமது ரியாஸ் பேசினார். ""7-ம் வகுப்பு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.  கடந்த 3 ஆண்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக ஆடி எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்து வருகிறேன். பேட்ஸ்மேன் ஆன நான் மாநில அளவிலான  ஜெய்கிஷண் கிரிக்கெட் போட்டியில் ஓர் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 110 ரன்களும், இறுதி  ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் குவித்தேன்.

 இதனால் எனக்கு  சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது கிடைத்தது. பள்ளிகளுக்கு இடையிலான பனிமலர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருது கிடைத்தது.

மேலும் எங்கள் பள்ளி நடத்திய மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததற்காக,   சிறந்த ஃபீல்டருக்கான விருது கிடைத்தது. என் பெற்றோர் சாகுல் அகமது - சயீத் அலி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் என்னுடைய ரோல் மாடல்.

எங்களுக்குத் தினமும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை பெüலிங், பேட்டிங், பீல்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், பந்துவீசவும் தேவையான உடற்பயிற்சிகளை பயிற்சியாளர் ஹாரிங்டன் அளித்து வருகிறார்''என்றார்.

இவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும்  ஹாரிங்டன், ""இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மாநில அளவிலான போட்டிகளில் கலக்கி வரும் இவர்கள் தேசிய   அணிக்காக தேர்வாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இவர்கள் இருவரும் ஓர் ஆட்டத்தில் இணைந்து விளையாடினால் அந்த அணிக்கு வெற்றி நிச்சயம். அந்த அளவுக்கு கிரிக்கெட் இரட்டையர்களாக ரியாஸýம், விவேக்கும் உள்ளனர். சென்னையிலிருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உருவாக வேண்டும் என்பதற்காக, இப்பள்ளியின் தாளாளர் கிஷோர் குமார் நிறைய அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றார்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →