முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கௌரவம் தந்த கைப்பந்து! ஹேண்ட்பால்

விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார்  திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த சபிதா. சென்னையில் கடந்த மாதம்  நடைபெற்ற தேசிய அளவிலான மினி பெண்கள் ஹேண்ட்பால் போட்டியில் தமிழக அண

ஞாயிறு கொண்டாட்டம்

கௌரவம் தந்த கைப்பந்து! ஹேண்ட்பால்

விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார்  திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த சபிதா. சென்னையில் கடந்த மாதம்  நடைபெற்ற தேசிய அளவிலான மினி பெண்கள் ஹேண்ட்பால் போட்டியில் தமிழக அண

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:10 PM
பகிர்:

விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார்  திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த சபிதா. சென்னையில் கடந்த மாதம்

 நடைபெற்ற தேசிய அளவிலான மினி பெண்கள்

ஹேண்ட்பால்

போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று அணிக்கு தங்கப் பதக்கத்தைக் கொண்டு

 வந்திருக்கிறார் சபிதா. சென்னை மல்ட்டிபர்ப்பஸ் விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம் பேசியபோது...

 எந்த வயதிலிருந்து ஹேண்ட்பால் விளையாடி வருகிறீர்கள்...?

 திருவண்ணாமலையில் உள்ள வி.டி.எஸ். பள்ளியில் படிக்கும்போது தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வந்தேன். பின்னர் எனக்கு விளையாட்டு விடுதியில் இடம் கிடைத்தது. அங்குதான் எனக்கு ஹேண்ட்பால் விளையாட்டு அறிமுகமானது. சர்வதேச அளவில் பிரபலமான ஹேண்ட்பால் விளையாட்டு எனக்கும் பிடித்துப் போனது. அந்த நாள் முதல் ஹேண்ட்பால் விளையாட்டை எனது உயிராக நினைத்து விளையாடி வருகிறேன்.

 உங்களது பயிற்சியாளர்...?

 திருவண்ணாமலையைச் சேர்ந்த தினகரன் என்பவர்தான் எங்களது பயிற்சியாளர். மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்து ஹேண்ட்பால் விளையாடுபவர்களைத் தேடித் தேடி அணியில் சேர்த்து எங்களை இந்த உன்னதமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் தினகரன்.

ஹேண்ட்பால் போட்டிகளில் பங்கேற்றது குறித்து...?

12 வயது முதல் ஹேண்ட்பால் போட்டிகளில் விளையாடி வருகிறேன். மத்தியப் பிரதேசத்தில் 2009-ல் நடந்த தேசிய ஹேண்ட்பால் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றோம். லக்னோவில் அதே ஆண்டில் நடந்த தேசிய மினி ஹேண்ட்பால் போட்டியில் வெண்கலம் வென்றோம்.

 2010-ல் மைசூரில் நடைபெற்ற தென் மண்டல ஹேண்ட்பால் போட்டியில் எங்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதுவரை 8 தேசியப் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். சென்னையில் கடந்த மாதம் நடந்த தேசிய மினி பெண்கள் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தோம்.

மறக்க முடியாத போட்டி...?

 சென்னையில் சமீபத்தில் நடந்த தேசிய போட்டிதான் எனக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. கால் இறுதிப் போட்டியிலும், அரை இறுதி, இறுதிப் போட்டியிலும் கடுமையான சவால்களைச் சந்தித்தோம். எங்களது விடாமுயற்சி, பயிற்சி, ஆட்டத் திறன், தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சிதான் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறுவோம்.

 தேசியப் போட்டிகளைப் போலவே ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளோம். குடியரசு தின விளையாட்டுப் போட்டி, பாரதியார் தின விளையாட்டுப் போட்டி, தேசிய பள்ளிகள் சம்மேளன விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.

 பல போட்டிகளில் அணிக்குத் தலைமையேற்றுச் சென்றுள்ளேன். மாநிலப் போட்டிகளில் திருவண்ணாமலை அணிக்குக் கேப்டனாக பொறுப்பேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று தந்துள்ளேன். 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் திருவண்ணாமலை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று அணிக்குப் பதக்கங்களை வென்று வந்தேன்.

 உங்கள் வெற்றிக்கு ஊக்கம் அளிப்பவர்கள்...?

 முதலில் எனது பயிற்சியாளர் தினகரன், பெற்றோர் நாராயண்-அஞ்சலா ஆகியோர். அதன்பிறகு தமிழக ஹேண்ட்பால் சங்க பொதுச் செயலர் சரவணன். ஒவ்வொரு தேசியப் போட்டிக்குச் செல்லும்போது எங்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெற வாழ்த்துவார். இதை எங்களால் மறக்க முடியாது. தமிழக அணி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருவதற்கு பொதுச் செயலாளர் சரவணனின் பங்களிப்பு அளவிட முடியாதது.

 பிடித்த வேறு விளையாட்டுகள்...?

 தடகள விளையாட்டுகள் பிடிக்கும். படிப்பு, பயிற்சி நேரம் போக இசை கேட்பது பிடிக்கும்.

 பயிற்சி நேரம்...?

 திருவண்ணாமலை விளையாட்டு விடுதியில் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் தினந்தோறும் 6 மணி நேரம் பயிற்சி இருக்கும். விடுமுறை நாள்களில் பயிற்சி நேரம் கூடுதலாக இருக்கும்.

 எதிர்கால லட்சியம்...?

 தொடர்ந்து தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்கவேண்டும். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும். தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.

 படங்கள்: சிவக்குமார்.

முழு கட்டுரையைப் படிக்க →