ஐ.பி.எல். தெரியும்; ஐ.வி.எல். தெரியுமா?
இந்தியாவில் கிரிக்கெட், டென்னிஸýக்கு அடுத்தபடியாக பிரபலமான விளையாட்டாக விளங்குவது வாலிபால் விளையாட்டுதான். வாலிபாலில் ஏராளமான சர்வதேச வீரர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அந்த வரிசையில் சர்வதேச வீரர்க
ஞாயிறு கொண்டாட்டம்ஐ.பி.எல். தெரியும்; ஐ.வி.எல். தெரியுமா?
இந்தியாவில் கிரிக்கெட், டென்னிஸýக்கு அடுத்தபடியாக பிரபலமான விளையாட்டாக விளங்குவது வாலிபால் விளையாட்டுதான். வாலிபாலில் ஏராளமான சர்வதேச வீரர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அந்த வரிசையில் சர்வதேச வீரர்க
இந்தியாவில் கிரிக்கெட், டென்னிஸýக்கு அடுத்தபடியாக பிரபலமான விளையாட்டாக விளங்குவது வாலிபால் விளையாட்டுதான். வாலிபாலில் ஏராளமான சர்வதேச வீரர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அந்த வரிசையில் சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்து வீறுநடை போட்டு வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டைப் போலவே சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஐ.வி.எல். (இந்தியன் வாலிபால் லீக்) போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது சென்னை ஸ்பைக்கர்ஸ். சென்னை ஸ்பைக்கர்ஸ் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருப்பவர் அணியின் கேப்டனும், பலமுறை இந்திய அணிக்காக விளையாடி வெற்றிகளைக் குவித்தவருமான ஜே. நடராஜன்.
ஐ.வி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.
ஐ.வி.எல். உருவானது எப்படி...
இந்திய வாலிபால் சம்மேளனம்தான் ஐ.வி.எல். போட்டியை உருவாக்கியது. முதலாவது ஐ.வி.எல். போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. சென்னை ஸ்பைக்கர்ஸ், ஹைதராபாத் சார்ஜர்ஸ், மராத்தா வாரியர்ஸ், கேரளா கில்லர்ஸ், யேனம் டைகர்ஸ், கர்நாடகா புல்ஸ் ஆகிய 6 அணிகள் பட்டம் பெற களத்தில் குதித்தன.
சென்னை, ஹைதராபாத், பெங்களூர் என 3 நகரங்களில் 3 கட்டங்களாக போட்டிகள் நடந்தன. 2 நகரங்களில் நடந்த போட்டிகளில் சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் வெற்றி வாகை சூடியது. 3 கட்டங்களில் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.
ஐ.வி.எல். போட்டி வெற்றிகரமானதாக உருவாகியுள்ளதா?
நிச்சயமாக. 3 கட்டங்களாக நடந்த போட்டிகளில் ஏராளமான வீரர்கள் உருவாகியுள்ளனர். போட்டிகளைக் காண மக்கள் குவிந்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டைப் போலவே ஐ.வி.எல். வாலிபால் போட்டியும் பிரபலமாகிவிட்டது. இனி ஆண்டுதோறும் ஐ.வி.எல். போட்டியையும் நடத்த வாலிபால் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
மற்ற வாலிபால் போட்டிகளுக்கும், ஐ.வி.எல். போட்டிக்கும் என்ன வித்தியாசம்?
மற்ற போட்டிகள் என்றால் தொடர்ச்சியாக 4 அல்லது 5 ஆட்டங்கள் இருக்கும். ஆனால் ஐ.வி.எல்.-லில் தொடர்ந்து 20 ஆட்டங்கள் வரை ஆடவேண்டியிருந்தது. உடல்தகுதி முழுமையாக இருந்தால் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விளையாடினர்.
போட்டிக்காக நாங்கள் பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டோம். இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்ரீதரன் எங்களுக்குப் பயிற்சி அளித்தார். அது எங்களுக்கு உபயோகமாக இருந்தது.
பரிசுத்தொகை...?
பரிசுத்தொகையாக சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் அணிக்கு ரூ.28.60 லட்சம் கிடைத்தது. போட்டிக்கு ஸ்பான்சர் செய்த கே.ஏ.எல்.எஸ். குரூப் உரிமையாளர் வாசுதேவன், பனிமலர் பொறியியல் கல்லூரி சக்திகுமார் ஆகியோருக்கு எங்களது நன்றி.
ஒவ்வொரு கட்டத்தில் வெற்றி பெறும்போதும், அதிக புள்ளிகளைப் பெறும்போது, முதலிடம் பெறும்போதும் என் அணியின் ஒவ்வொரு படிக்கும் எங்களுக்குப் பரிசுகளை அள்ளித் தருகின்றனர். இதனால் வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்கிறது. திறமையான வாலிபால் வீரர்களுக்கு ஐ.வி.எல். போட்டி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
பயிற்சி...?
போட்டிக்காக நான்கைந்து மாதங்களாக தீவிர பயிற்சி செய்தோம். பயிற்சியின் முடிவில் வெற்றிக்கனி எங்களுக்குக் கிடைத்தது. பயிற்சியாளர்கள் வெங்கடேசன், சுதாகர், பிஸியோ சரோன் ஆகியோர் எங்களுக்கு மிகவும் உதவினர். எங்களது வெற்றி தொடரும்.
சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் உரிமையாளர் வாசுதேவனிடம் பேசியபோது...
""தரம்வாய்ந்த வாலிபால் வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்பைக்கர்ஸ் அணியைத் துவங்கினோம். இதற்கு ஆரம்பத்திலேயே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
அணியில் 2 பேர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் ஐ.வி.எல். போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஐ.வி.எல். போட்டிக்குக் கிடைத்த வரவேற்பு, ரசிகர்கள் அதற்கு அளித்த உற்சாகத்தைப் பார்க்கும்போது விரைவில் ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அணியில் உள்ள கேப்டன் நடராஜன், சிவபாலன், கபில் ஆகியோரது ஆட்டம் மெச்சும்படியாக இருக்கிறது.
ஸ்பைக்கர்ஸ் அணிக்காக உள்விளையாட்டு அரங்கம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளில் இதை உருவாக்குவோம். இதற்காக இந்திய வாலிபால் சம்மேளனத்தின் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்.
இந்தியாவுக்காக நட்சத்திர வீரர்களை உருவாக்கி, அவர்களைச் சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்வோம். இதன்மூலம் வாலிபால் உலகில் இந்தியா அசைக்க முடியாத அணியாக மாறும். இந்த நாள் வெகுதொலைவில் இல்லை'' என்கிறார் வாசுதேவன் உறுதியாக.