முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை!

500-க்கும் மேற்பட்ட கபடி வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர். 44 ஆண்டுகளாக கபடி விளையாட்டையே உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டு வருபவர். ஏராளமான மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்றவர். பல்வேறு மாநில

ஞாயிறு கொண்டாட்டம்

பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை!

500-க்கும் மேற்பட்ட கபடி வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர். 44 ஆண்டுகளாக கபடி விளையாட்டையே உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டு வருபவர். ஏராளமான மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்றவர். பல்வேறு மாநில

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

500-க்கும் மேற்பட்ட கபடி வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர். 44 ஆண்டுகளாக கபடி விளையாட்டையே உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டு வருபவர். ஏராளமான மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்றவர். பல்வேறு மாநில போட்டிகளில் வெற்றி வாகை சூடியவர், ஏராளமான வீரர், வீராங்கனைகளுக்கு கபடி மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் இப்படி பல பெருமைகளுக்கு உரியவர் "கோல்ட்' எம். ராஜேந்திரன்.

54 வயதாகும் ராஜேந்திரன் 10 வயது முதலே கபடி விளையாடி வருகிறார். 15 வயதில்தான் முறையாக கபடி விளையாட்டைப் பயின்று போட்டிகளில் பங்கேற்று வாகை சூடினார். தமிழக அணிக்காக, போர்ட் டிரஸ்ட் அணிக்காகவே பல போட்டிகளில் வெற்றி தேடித் கொடுத்தவர். சென்னை போர்ட் டிரஸ்ட்டில் கிரேட்-2 மோல்டராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன், வரவிருக்கும் போட்டிக்காக தனது கபடி ஸ்டார் அணி வீராங்கனைகளுக்கு சென்னை ராணி மேரிக் கல்லூரி மைதானத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து...

எந்த வயது முதல் கபடி விளையாடி வருகிறீர்கள் ஆர்வம் வந்தது எப்படி?

நான் சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவன். எங்கள் குப்பத்தைச் சேர்ந்த சக மாணவர்களுடன் பள்ளியிலிருந்தே கபடி விளையாடினேன். அப்போது நொச்சிக்குப்பத்தில் ஏராளமான கபடி வீரர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்துத்தான் எனக்கும் கபடி மீது ஆசை வந்தது.

முழுநேர கபடி வீரராக மாறியது எப்போது...

1975-76-ம் ஆண்டுகளில் தீவிரமாக கபடி விளையாடிக் கொண்டிருந்தோம். பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரையோர பகுதிகளில் கபடி விளையாடியிருக்கிறேன். 84-ம் ஆண்டில் பரமத்தி வேலூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.

அப்போது சென்னை துறைமுக பொறுப்புக் கழக பேரதிபராக இருந்த, ஐஏஎஸ் அதிகாரி பால்ராஜ் என்னை அழைத்து போர்ட் டிரஸ்டில் வேலைவாய்ப்புக் கொடுத்தார். அப்போது முதல் முழு நேர கபடி வீரராக மாறிவிட்டேன். போர்ட் டிரஸ்டில் இருந்தபோது சுமார் 150 மாநில, தேசியப் போட்டிகளில் எங்கள் அணி விளையாடியிருக்கிறது.

இதில் ஏராளமான போட்டிகளில் முதலிடம், இரண்டாம் இடங்களைப் பிடித்தோம். கபடி மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, "நீங்கள் கபடியின் தங்கம். உங்களை "கோல்ட்' ராஜேந்திரன் என்றே அழைக்கப் போகிறேன் என பால்ராஜ் தெரிவித்தார். அப்போதுமுதல் "கோல்ட்' என்ற அடைமொழி எனது பெயருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது. போர்ட் டிரஸ்ட் அணிக்காக 1991 வரை விளையாடினேன். அதன் பின்னர் போர்ட் டிரஸ்டுக்காக மகளிர் அணியை உருவாக்கி பயிற்சியாளராக மாறினேன்.

1991 முதல் 2005-ம் ஆண்டு வரை போர்ட் டிரஸ்ட் மகளிர் அணி ஏராளமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் மகளிர் அணியில் இருந்த பல வீராங்கனைகளுக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது மீண்டும் பலம்வாய்ந்த போர்ட் டிரஸ்ட் மகளிர் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.

நீங்கள் வகித்து வரும் பதவிகள்...

சென்னை மாவட்ட கபடி சங்க செயலராக இப்போது இருக்கிறேன். இதற்கு முன் தலைவராக பதவி வகித்தேன். மேலும் அகில இந்திய பீச் கபடி சங்கத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன். மேலும் தமிழ்நாடு கபடி சங்க தேர்வுக்குழு தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

முக்கியமான வெற்றிகள்...

போர்ட் டிரஸ்ட் மகளிர் 1992-ல் ராஜஸ்தானில் நடந்த தேசியப் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. 2005-ல் கர்நூலில் நடந்த தேசியப் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் போர்ட் டிரஸ்ட் அணி வந்துவிடும். இது நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனைதான்.

இந்தியாவிலேயே சிறந்த அணி என்று கருதக்கூடிய இந்தியன் ரயில்வே, மகாராஷ்டிர அணியினரை எங்கள் அணி பலமுறை வென்றுள்ளது. இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். அதுமட்டுமல்லாமல் கடந்த 9 ஆண்டுகளாக கபடி ஸ்டார் என்ற கபடி கிளப்பை ஏற்படுத்தி பயிற்சி அளித்து வருகின்றேன். இந்த அணியும் மாநில அளவிலான ஏராளமான போட்டிகளில் பட்டம் வென்றுள்ளது. இந்த கிளப் மூலம் ஏராளமான ஏழை வீராங்கனைகளை உருவாக்குவதுதான் லட்சியம்.

கபடி விளையாட்டில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு பணிகளில் முன்உரிமை வழங்கப்படுகிறதா?

சுமார் 500-க்கும் மேற்பட்ட மாநில, தேசிய, சர்வதேச வீரர், வீராங்கனைகளை உருவாக்கியிருப்பேன். இதில் பலர் தெற்கு ரயில்வே, போர்ட் டிரஸ்ட், வங்கிகள், காவல்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். என்னிடம் பயின்ற போர்ட் டிரஸ்டில் மட்டும் 25 பேர் பணியாற்றி வருகிறார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற 20 பேர் காவல்துறையில் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

இப்போதுள்ள அணியில் பலம்வாய்ந்த அணி எது?

தமிழக அளவில் திண்டுக்கல் அணியும், தேசிய அளவில் மகாராஷ்டிர அணியும் பலம்வாய்ந்ததாக உள்ளது. தமிழக அணி 2-வது, 3-வது இடத்தில் இருக்கிறது. முன்பு போல தமிழகத்தில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு தருவதில்லை. காவல்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்ததால் தமிழக வீரர், வீராங்கனைகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இங்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகமும் சிறந்த அணியாக தேசிய அளவில் பரிமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →