முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கூந்தல் டிப்ஸ்...

*    இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி, நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையைத் தடுக்க பச்சைக் காய்கறிகள், பழ வக

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:02 PM
பகிர்:

*    இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி, நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையைத் தடுக்க பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 *    வெந்தயக் கீரையை அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து தலையை அலசினால், கூந்தல் உதிர்வது குறையும்.

 *    முதல்நாள் இரவு இரண்டு கைப்பிடி வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் மறுநாள் காலை தலைக்குக் குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசினால் பேன் தொல்லை நீங்கும்.

 *    வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

 *    செம்பருத்தி இலையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இலையை எடுத்துப் பிழிந்தால் அருமையான ஷாம்பு ரெடி.

 *    வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் மூன்று மாத காலம் குளித்துப்பாருங்கள். எந்தக் காரணத்தினால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதையும் தடுக்கும். கருகருவென முடி வளரும்.

 *    புளிப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்களை அதிக அளவில் உண்பது தலை முடிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.