காலிஃபிளவர் கிரேவி
தேவையானவை: பச்சைப் பட்டாணி- 200 கிராம், காலிபிளவர்- 500 கிராம், தேங்காய்- அரை மூடி, மிளகாய்பொடி, தனியா, மஞ்சள்பொடி- 1 தேக்கரண்டி, வெந்தயம்- 1/2 தேக்கரண்டி, வெல்லம்- 50 கிராம், சிவப்பு மிளகாய்-2, கடுகு
தேவையானவை:
பச்சைப் பட்டாணி- 200 கிராம், காலிபிளவர்- 500 கிராம், தேங்காய்- அரை மூடி, மிளகாய்பொடி, தனியா, மஞ்சள்பொடி- 1 தேக்கரண்டி, வெந்தயம்- 1/2 தேக்கரண்டி, வெல்லம்- 50 கிராம், சிவப்பு மிளகாய்-2, கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு, எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
Advertisement
காலிபிளவரை சின்ன துண்டுகளாக நறுக்க வேண்டும். உப்பு கலந்த நீரில் காலிபிளவர், பச்சைப் பட்டாணியை வேக வைக்க வேண்டும். தனியா, கறிவேப்பிலை, வெந்தயத்தை வறுத்து மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்துள்ள காலிபிளவர், பட்டாணியுடன் இந்த பேஸ்ட்டைக் கலந்து, உப்பு, தண்ணீர் சேர்த்து திக்காக கிரேவியாக்கவும். கடுகு, சிவப்பு மிளகாய் தாளித்து கீழே இறக்கவும்.