தங்கச்சி வந்தியா?
காலைக் கதிரவன் செவ்வொளி பாய்ச்சி பவனி வர ஆரம்பித்துவிட்டான். புலவர் அரண்மனைக்குள் நுழைந்தார். நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு ராணி எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையில்
காலைக் கதிரவன் செவ்வொளி பாய்ச்சி பவனி வர ஆரம்பித்துவிட்டான். புலவர் அரண்மனைக்குள் நுழைந்தார். நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு ராணி எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையில் தங்க நிறச் சிவந்திப் பூக்கள் நிரம்பியிருந்தன. ராணியைக் கண்டதும், ""தங்கச்சி வந்தியா?'' என்றார் புலவர்.
ராணிக்கு முகம் சிவந்துவிட்டது. ""என்ன இது? நம்மை அண்டிப்பிழைக்கும் இவன் நம்மை "தங்கச்சி' உறவுமுறைச் சொல்லி அல்லவா அழைக்கிறான்?'' என்று எண்ணினார் ராணி. கோபம் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுச் சென்றார் ராணி.
புலவர் சென்றதும் ராஜாவிடம் முறையிட்டார் ராணி. ""அப்படியா? உன்னையா தங்கச்சி என்றார். நாளை வரட்டும், கவனிப்போம்'' என்றார் மன்னர்.
Advertisement
மறுநாள் புலவர் வந்தார். ""ஏனய்யா ராணியை "தங்கச்சி வந்தியா?' என்றீராமே அவள் உனக்குத் தங்கையா?'' என்றார் ராஜா.
பதறிய புலவர்,""மன்னா! நான் அழைத்ததே வேறு. "தங்கச் சிவந்தியா' என்பதை "தங்கச்சி வந்தியா' என்று இணைத்துச் சொல்லிவிட்டேன்'' என்றார் புலவர். மன்னர் முகத்தில் அசடு வழிந்தது. மன்னர் ராணியைப் பார்த்தார். ராணி முகத்தில் என்ன வழிந்ததோ? மன்னரைத்தான் கேட்க வேண்டும்.