முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சம்மர் டிப்ஸ்

•எலுமிச்சம் பழத்தோலை காலின் அடிப்பாகம், கைமுட்டி, கணுக்கால், முகம் ஆகியவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவினால் தேகம் பளபளக்கும்.    •வாரத்துக்கு ஒரு தடவை ஒரு சில துளி தேங்காய் எண்ணெயை உடலில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

•எலுமிச்சம் பழத்தோலை காலின் அடிப்பாகம், கைமுட்டி, கணுக்கால், முகம் ஆகியவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவினால் தேகம் பளபளக்கும்.

 •வாரத்துக்கு ஒரு தடவை ஒரு சில துளி தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துக் குளித்தால் சருமம் மிருதுவாகும்.

 •அதிக வெயிலால் மூக்கின் ஓரங்களில் அழுக்கு படியும். ஆவிபிடித்து பஞ்சால் மூக்கின் ஓரங்களை துடைத்தால் பலன் கிடைக்கும்.

 •நல்ல கொதிக்கும் நீரில் முகத்தைக் காட்டி ஆவி பிடித்தால் நீராவியால் முகம் சுத்தமாகும்.

 •வெயிலின் பாதிப்பால் கரும்புள்ளிகள் தோன்றினால் வெற்றிலை லேசாக அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து பூசினால் கரும்புள்ளிகள் மறையும்.

 •கரும்புள்ளிகளுக்கு எலுமிச்சை சாற்றுடன் கிளசரின் கலந்து பூசலாம். மருதாணியுடன் மஞ்சள் கலந்தும் தடவலாம்.

 •கோடையில் அதிகமான வாசனையுள்ள நறுமண திரவியங்களைப் பயன்படுத்த வேண்டாம். பலவிதமான அழகு சாதனங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வேண்டாம்.

 •கண் எரிச்சல் ஏற்பட்டால் உருளைக்கிழங்களை தோலுடன் சீவி பருத்தி துணியில் இரண்டு சிறு மூட்டைகள் போன்று கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் கண்கள் மீது வைத்துக் கொண்டு பத்து நிமிடங்கள் ஓய்வெடுங்கள். கண்கள் புத்துணர்ச்சியாகும்; கண்களுக்கு கீழ் பை போன்று தொங்கும் சதையும் நாளடையில் இறுகி இளமையாக தோற்றம் தரும்.

 •இரவில் தூங்கப்போகும்போது சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து கண்களில் விட்டுக்கொண்டால் கண் எரிச்சல் வராமல் தடுக்கலாம்; கண்களை சுற்றியுள்ள கருவளையும் காணாமல் போகும்; கண்கள் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.