ஞாயிறு கொண்டாட்டம்

இன்றைய சேமிப்பு; நாளைய புத்தகங்களுக்காக!

மாணவர்களை புத்தகங்களின் மீது நாட்டம் கொள்ளும்வகையில் புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தி மிகப்பெரிய அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, ஈரோடு புத்தகத் திருவிழா.

ஜெபலின்ஜான்

மாணவர்களை புத்தகங்களின் மீது நாட்டம் கொள்ளும்வகையில் புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தி மிகப்பெரிய அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, ஈரோடு புத்தகத் திருவிழா. புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டம் குறித்து ஈரோடு புத்தக திருவிழாவை நடத்திவரும் த.ஸ்டாலின் குணசேகரனிடம் கேட்டோம்:

புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டம் பற்றி...

புத்தகத் திருவிழா நடத்துவதன் பிரதான நோக்கமே இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் குறிப்பாக மாணவப் பருவத்தில் இருந்தே இப் பழக்கத்தை நெஞ்சில் ஆழப்படுத்திவிட்டால், கடைசிவரை புத்தகம் அவர்களை வழிநடத்தும் என்பதால்தான் புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டத்தை கொண்டுவந்தோம்.

2008-இல் இத்திட்டத்தைக் கொண்டுவந்தோம். புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் ரூ.10 மதிப்பிலான உண்டியலை ரூ.5 கொடுத்து வாங்கிச் செல்லலாம். அதில், புத்தகச் சேமிப்பு உண்டியல் என்றும், அது வழங்கப்படும் ஆண்டும் எழுதப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டில் புத்தகத் திருவிழாவுக்கு மாணவர்கள் வரும்போது உண்டியலைக் கொண்டு வந்து எங்கள் முன்னால் உடைத்து எண்ணினால் அதில் இருக்கும் தொகைக்கு ஏற்ப கூப்பன்களைக் கொடுப்போம். அதைவைத்து புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கலாம். இதுபோல வாங்கும் புத்தகங்களுக்கு 20 முதல் 40 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியை பதிப்பகங்கள் தாங்களாகவே முன்வந்து வழங்குகின்றன.

இத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற

சிந்தனை எப்படி வந்தது?

எனது வீட்டில் சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆனால் அதை எனது மகன், மகள் பெரிய அளவில் ஆர்வமாகப் படிப்பதில்லை. ஆனால் அவர்கள் வாங்கிவந்த புத்தகங்களை ஆர்வமாகப் படிக்கின்றனர். இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

புத்தகத் திருவிழா பற்றி பள்ளி, கல்லூரிகளில் காலை வழிபாட்டுக் கூட்டங்களில் பேசுவது எனது அன்றாடப் பணிகளில் ஒன்று. 2005-இல் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பேசும்போது, இன்னும் 2 மாதங்களுக்குள் தினமும் 50 பைசா சேமித்து வைத்தால் ரூ.30 கிடைக்கும். புத்தகத் திருவிழாவில் சத்திய சோதனை புத்தகம் ரூ.27-க்குக் கிடைக்கும் என்று பேசினேன். 2005-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் சத்திய சோதனை புத்தகம் ஆயிரக்கணக்கில் விற்பனையானது. அதை விற்பனை செய்ய வந்த விற்பனையாளர்கள் மதுரைக்கு 3 முறை சென்று அந்த புத்தகத்தை எடுத்துவந்து விற்பனை செய்தனர்; இருப்பினும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இச்சம்பவம்தான் புத்தகச் சேமிப்பு உண்டியல் திட்டத்துக்கு தூண்டுகோலாக அமைந்தது.

இதுபோல மாணவர்கள் தாங்களாகவே சேமித்த பணத்தில் புத்தகங்களை வாங்கும்போது தங்களது சொந்தப் புத்தகங்களாக நினைத்து ஆர்வமாகப் படிக்கின்றனர் என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டோம். அதனால்தான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT