ஞாயிறு கொண்டாட்டம்

நீளமான பஸ்

ஆட்டோமொபைல் எனப்படும் மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நாடு ஜெர்மனி. பி.எம்.டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஒபெல், வேக்ஸ்வேகன் என அனைத்து நாடுகளின் சாலைகளிலும் தடம்பதித்துள்ள சொகுசு கார்கள் அனைத்தும் ஜெர்மானியத் தயாரிப்புகள்தான்.

சு. வெங்கடேஸ்வரன்

ஆட்டோமொபைல் எனப்படும் மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நாடு ஜெர்மனி. பி.எம்.டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஒபெல், வேக்ஸ்வேகன் என அனைத்து நாடுகளின் சாலைகளிலும் தடம்பதித்துள்ள சொகுசு கார்கள் அனைத்தும் ஜெர்மானியத் தயாரிப்புகள்தான்.
 அதே நேரத்தில் ஜெர்மனியின் மோட்டார் வாகனத் துறைக்கு சவால் விடும் வகையில் ஒரு பஸ்ûஸ தயாரித்தது சீனா. சூப்பர் லைனர் என்று பெயரிடப்பட்ட இந்த பஸ்ஸின் நீளம் 82 அடி. இதில் 300 பேர் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும். 5 கதவுகளுடன், உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வசதிகளுடன் இந்த பஸ் சீனாவின் முக்கிய நகரங்களில் இப்போது இயங்கி வருகிறது.
 அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் பஸ்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும், பொதுப் போக்குவரத்துக்கு மக்களை ஈர்க்கும் வகையில் இந்த பிரமாண்டமான பஸ்ûஸ சீனா உருவாக்கியது.
 எனினும் இதனை தங்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட ஜெர்மனி, இதைவிட பிரமாண்டமான பஸ்ûஸ தயாரிக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.
 ஜெர்மனியின் மெகா பஸ் 101 அடி நீளம் உடையது. ஆனால் 256 பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். பெரும்பாலும் மின்சாரத்திலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் டீசலிலும் இயங்கும் வகையில் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்ஸôல் சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது சிறப்பம்சம்.ஜெர்மனியின் டிரஸ்டன் நகரில் நடைபெற்ற சோதனை ஓட்டத்திலும் இந்த பஸ் வெற்றிகரமாக நகரை வலம் வந்தது.
 போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள, குறுகிய சாலைகளில் இந்த பஸ்களை இயக்குவது கடினம் என்றாலும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இந்த பஸ் சிறப்பானதாகவே உள்ளது.
 தங்கள் நாட்டில் இதேபோன்ற பஸ்களை தயாரிப்பதற்கு ஆகும் செலவு, பராமரிப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்த சீனா, ஜெர்மனியில் இருந்து பஸ்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஒரு பஸ்ஸின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி.
 இதற்கு முன்பு மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து அளித்த பிரமாண்ட பஸ்கள் 2002 முதல் 2007-ம் ஆண்டு வரை லண்டன் நகரில் இயங்கி வந்தன. இந்த பஸ்களால் ஏற்பட்ட விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் லண்டனுக்கு இந்த வகை பஸ் தேவையில்லை என கைவிடப்பட்டது.
 சென்னை போன்ற நகரங்களில் சில வழித்தடங்களில் மட்டும் இயங்கும் வெஸ்டிபிள் பஸ்களே (தொடர் பேருந்து) பல இடங்களில் சிக்கித் திணறுகின்றன. எனவே அதைவிட பிரமாண்டமான பஸ்களை நமது நாட்டில் இயக்குவது கடினம். எனவே இத்தகைய நீள................மான பஸ்ûஸ படத்தில் மட்டுமே பார்த்து நாம் ஆறுதல் அடையலாம்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT