முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒற்றைக்கால் மனிதன்!

ராமநாதபுரம் திருநகரில் வசிக்கும் பணி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாமியின் மகன் வி.மணிகண்டன். 30 வயதே நிரம்பிய இந்த இளைஞர் எம்.காம்,பி.எட் பட்டப்படிப்புகளையும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

ராமநாதபுரம் திருநகரில் வசிக்கும் பணி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாமியின் மகன் வி.மணிகண்டன். 30 வயதே நிரம்பிய இந்த இளைஞர் எம்.காம்,பி.எட் பட்டப்படிப்புகளையும், கூட்டுறவு, கணினி அறிவியல் உள்ளிட்டவற்றில் பட்டயப்படிப்புகளையும் படித்து முடித்துள்ளார். சிறுவயதில் விபத்து ஏற்பட்டு அதனால் இடதுகாலை மட்டும் அறுவைச் சிகிச்சை செய்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
 சாலைவிதிகளை கடவுளுக்கு நிகராக பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கின்னஸ் சாதனையாளராக வேண்டும் என்ற நோக்கத்துடனும் கடந்த ஆண்டு ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தனது ஒரு காலால் மட்டுமே சைக்கிள் ஓட்டி சென்று தனது சாதனைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
 இந்த சாதனை மனிதரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்:
 ""பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆர்வமாக விளையாடிய போது கல் இடறி விட்டு எனது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதைக் கவனிக்காமல் விட்டதால் செப்டிக் ஆகி எனது இடதுகால் முழுவதையுமே அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
 எனது இரு கால்களில் ஒன்றைத் துண்டித்து விட்ட பிறகு வாழ்க்கையே இருண்டு போய் விட்டதே என்று ஆரம்பத்தில் கவலைப்பட்டு முடங்கி கிடந்தேன். பின்னர் இரு கால்களில் ஒன்றை இழந்தாலும் மற்றொன்று இருக்கும் போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
 ஒற்றைக் காலிலேயே நொண்டி, நொண்டி காய்கறி வாங்குவது உட்பட எல்லா இடங்களுக்கும் சென்று வர பழகினேன். இன்று வரை எந்த ஊன்றுகோலும் இல்லாமல் அப்படித்தான் நடக்கிறேன். பின்னர் ஒற்றைக்காலிலேயே சைக்கிள் ஓட்டிப் பழகினேன். கடந்த 2008 ஆம் ஆண்டு சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தொடர்ந்து 10 நாட்கள் சைக்கிளில் ஒற்றைக்காலில் ஓட்டி சாதனை புரிந்தேன். அதன் பின்னர் கடந்த 2013 டிசம்பரில் ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ந்து 6 நாட்கள் சைக்கிள் ஓட்டினேன்.
 எனது சைக்கிள் பயணத்தின்போது, மக்களிடம் நான் ஏற்கெனவே அச்சடித்து வைத்திருக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பேன். அதில் பொதுமக்கள் சாலை விதிகளை கடவுளுக்கு நிகராக மதித்து நடக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் விபத்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என அச்சிடப்பட்டிருக்கும். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதைகளையும், சம்பவங்களையும் மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் விளக்கிச் சொல்வேன்.
 ஒற்றைக்காலில் நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டி கின்னஸில் இடம் பிடிக்கவும் முடிவு செய்துள்ளேன் '' என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →