முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

 தலைமுடி அடர்த்தியாக...!

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் கலந்து, முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து,

Updated On : 23 ஆகஸ்ட், 2015 at 1:36 PM
பகிர்:

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் கலந்து, முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். 

 அவகோடா மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் பழங்களில் உள்ள வைட்டமின்கள் மயிர்கால்களுக்கு கிடைத்து, முடி நன்கு வலிமையோடும், அடர்த்தியாகவும் இருக்கும்.

 தேங்காய் எண்ணெய்யைச் சூடேற்றி, அதனைக் கொண்டு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதைக் காணலாம்.

Advertisement

 முடிக்கு கண்டிஷனர் போடும் போது, அந்த கண்டிஷனருடன் ஓட்ஸைப் பொடி செய்து சேர்த்து உபயோகப்படுத்த, முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

 வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். இது முடி உதிர்வதையும் குறைக்கும். எனவே வெங்காயச் சாறை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும்.

 முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று நெல்லிக்காய். எனவே அந்த நெல்லிக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.