வரகுப் பொங்கல்
வெறும் கடாயில் பயற்றம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணை
தேவையானவை:
வரகரிசி - 1 கப், பயத்தம் பருப்பு - 1/2 கப், தண்ணீர் - 4 கப், பச்சை மிளகாய் - 5 ( பொடியாக நறுக்கியது), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, நெய்யும் எண்ணெய்யுமாக சேர்த்து - கால் கப், கடுகு - 1 சிட்டிகை, உளுந்தம் பருப்பு - 1/2 , முந்திரி - 8, சீரகம் - 1/4 தேவைக்கேற்ப, மிளகு 1/2 தேவைக்கேற்ப, கறிவேப்பிலை சிறிது.
செய்முறை:
Advertisement
வெறும் கடாயில் பயற்றம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும். அதை இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் நெய்யும் எண்ணெய்யும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சூடான வரகு பொங்கல் ரெடி.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். (4 மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதைவிட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேக வைத்தால் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.)