ஞாயிறு கொண்டாட்டம்

வலையில் பிடித்தவை...

சென்னை மீது என்ன தான் காதலோ இந்த மேகங்களுக்கு... நினைக்கும் போதெல்லாம் முத்தமிட்டு செல்கிறது... மழையாக

உமா பார்வதி

சென்னை மீது என்ன தான் காதலோ இந்த மேகங்களுக்கு... நினைக்கும் போதெல்லாம் முத்தமிட்டு செல்கிறது... மழையாக

-லோகேஸ்வரி

"குழலி, நாளைக்கு சைக்கிள் டெஸ்ட், படிக்கப்போறியா இல்லையா?"
"மா, நாளைக்கும் லீவாத்தாம்மா இருக்கும்'

Parallel reading  பற்றி சில வார்த்தைகள்...

வாசிப்பதே குறைஞ்சிட்டு இருக்கு இதில் டஹழ்ஹப்ப்ங்ப் ழ்ங்ஹக்ண்ய்ஞ் ஆ என்ற கேள்வி எழலாம். அடிப்படிடையில் எனது கவனத்தை ஒரே விஷயத்தில் வெகுநேரம் குவிய வைக்க முடியாது. அது எந்த செயலானாலும். தொடர்ச்சியாக ஒரே புத்தகத்தை முடித்தமாதிரி சமீபத்தில் எதுவும் இல்லை எனலாம். சரி இதில் என்ன சுவை இருக்கு? ஆர்ர்ந் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங் என்ற குழுவில் இந்த வினா எழுப்பப்பட்டது. ஒரு உதாரணத்துடன் சொன்னா இன்னும் எளிமையாகப் புரியும். தற்சமயம் வாசிக்கும் நான்கு புத்தகங்கள்

1.Encyclopedia of Children literature 600+ pages by Peter Hunt.
2. The Adventures of Rusty -Ruskin Bond 278 pages.
3. குழந்தைகளின் நூறு மொழிகள் - ச.மாடசாமி
4. மஹாஸ்வேதா தேவி கதைகள் 367 பக்கம்.

தொடர்ச்சியாக தீவிர சப்ஜக்ட்டுகளை வாசித்தால் மூச்சுமுட்டிவிடும். Encyclopedia கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. அதில் ஏகப்பட்ட தங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்ள். அதனால் மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் ஒரு சப்போர்ட். ஒரு மூச்சுவிடுவதற்காக ஒரு புத்தகம். அதுவும் லைட் ரீடிங் இல்லை என்றாலும் முந்தைய புத்தகத்திற்கு அது ஒரு ரிலீஃப்.

இந்தப் பக்கம் மற்ற இரண்டு புத்தகங்கள். Ruskin Bond இந்திய சிறுவர் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை. இவரின் ஆங்கில சிறுவர் கதைகள் இந்தியாவே கொண்டாடும் கதைகள் எனலாம். இவருடைய கதைகள் பெரும்பாலும் இவரே சொல்வதுபோலவே அமைந்திருக்கும். அதுவும் அவர் வாழ்ந்த இமயத்தில் இருக்கும் ஊர்களிலும் பயணங்களிலும் அமைந்து இருக்கும். இந்தப்பக்கம் மஹாஸ்வேதா தேவி வங்காளத்தின் மிக முக்கியமான எழுத்தாளுமை. ஆதிவாசிகளின் நலனுக்காக தொடர்ச்சியாக போராடியவர். கதைகள் பெரும்பாலும் காடுகளுக்குள்ளேயும் இயற்கை சார்ந்து அங்கிருக்கும் பிரச்னைகளிலும் சுழன்று இருக்கும். இவரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இவரும் சிறுவர் கதைகளை எழுதி இருக்கிறார் என்பதே.

சரி, இப்ப டப்ங்ஹள்ன்ழ்ங் ர்ச் தங்ஹக்ண்ய்ஞ் பகுதிக்கு வரேன். மலைகளில் பயணிக்கலாம் (Ruskin Bond)), ஒரு சிறுவனாக மாறலாம், அவன் உலகில் சஞ்சரிக்கலாம். டக்கென கியரை மாற்றி காட்டுக்குள் போகலாம். ஒரு ரிலீஃப் ஆபிஸரின் வாழ்கையை வாழ ஆரம்பிக்கலாம், ஆதிவாசி குழந்தையாக மாறி அவன் உலகை தரிசிக்கலாம் (மஹாஸ்வேதா கதைகள்). இரண்டு வேறு உலகங்கள். மிக முக்கியமான விஷயம் ரஸ்கின் காட்டுவது ஒரு ஃபேன்டசியான உலகம். கவலைகள் அற்றது. கொண்டாட்டமானது. இங்கே தேவி காட்டுவது ஒரு மாதிரி இருண்மை. (இதுவரையில் மூன்று முறை கதறி அழுதுவிட்டேன்). சோகம் என்று சொல்லமுடியாது. ஒருவித வலி.

அதனால் தான் சொல்கிறேன் வாசியுங்க. இன்னும் அதனை ருசிக்க Parallel reading-கும் செய்யுங்க. 


தொகுப்பு: சந்திர.பிரவீண்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT