முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விசில் அடித்தால் வரும் காக்கைகள்!

சென்னை தரமணியில் உள்ள மத்திய அணுசக்தி துறை அலுவலகத்தில் பதிவாளராக பணிபுரிபவர் எஸ்.விஷ்ணு பிரசாத்.

Updated On : 30 அக்டோபர், 2017 at 12:30 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:29 PM

சென்னை தரமணியில் உள்ள மத்திய அணுசக்தி துறை அலுவலகத்தில் பதிவாளராக பணிபுரிபவர் எஸ்.விஷ்ணு பிரசாத். 55 வயதான இவர் திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம்.
தினமும் நடைப்பயிற்சியின்போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அவர் விசில் அடிக்கிறார். உடனே,  அவரைச் சுற்றி ஏராளமான காகங்கள் கூடிவிடுகின்றன. அவர், அந்த காகங்களுக்கு காராபூந்தி, பிஸ்கெட் போன்றவற்றை வழங்குகிறார்.  இது தினந்தோறும் நடைபெறும் நிகழ்வாகவே மாறிவிட்டது.

இதுபற்றி, விஷ்ணு பிரசாத் கூறுகையில்:  
""சண்முகம் என்ற முதியவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே காகங்களுக்கு உணவு அளித்து வந்தார். அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஒரு நாள்,  காகங்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் அந்த முதியவர் வரவில்லை. தேடிப்பார்த்தபோது, அருகே இருந்த பூங்காவில் கவலையுடன் உட்கார்ந்திருந்தார். என்னவென்று கேட்டபோது, தன்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார். 

அவர் வர இயலாத இரண்டு நாட்களுக்கு நானே காகங்களுக்கு உணவு அளித்தேன். அதற்குப் பிறகு அந்த பெரியவரைப் பார்க்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று பின்னால்தான் தெரிந்தது. அவர் விட்டுச்சென்றதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். என் விசில் சத்தம் கேட்டதும் காக்கைகள் எங்கிருந்தாலும் வந்துவிடுகின்றன'' என்றார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.