முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

எங்க காட்டுல மழை

"குள்ளநரிக் கூட்டம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களை பெற்றவர் இயக்குநர் ஸ்ரீபாலாஜி . இவர், தற்போது எழுதி இயக்கி வரும் படம் "எங்க காட்டுல மழை'. மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

"குள்ளநரிக் கூட்டம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களை பெற்றவர் இயக்குநர் ஸ்ரீபாலாஜி . இவர், தற்போது எழுதி இயக்கி வரும் படம் "எங்க காட்டுல மழை'. மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். அப்புக்குட்டி, சாம்ஸ், அருள்தாஸ் உள்ளிட்டோர் கதையின் முக்கிய வேடங்களை ஏற்று நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும்போது... ""இது காதலும், நகைச்சுவையும் கலந்த படம். சென்னை நகரம் சார்ந்த கதை. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த மிதுனுக்கு வருமானம் இல்லை. சந்திக்கிறவர்களிடம் எல்லாம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஆடம்பரமாக வாழ்கிறார். இன்னொரு புறம், அப்புக்குட்டி பணம் இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார். இவர்கள் இருவரும் ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். முக்கியமான விஷயம் கைக்கூடும் இடத்தில் இருவருக்கும் பெருத்த ஏமாற்றம். பின் நடந்தது என்ன? அந்த விஷயத்துக்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்பதை சுவாரஸ்யமாக சொல்லுவதே கதையின் பின்னணி. படத்தில் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார் இயக்குநர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படத்தை வெளியிடுகிறது.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →