முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

லிட்டர்  கஞ்சி 120 ரூபாய் 

இந்தியாவில்  சோறு சமைக்கும் போது கஞ்சி வீணாகிறதே என்று  பிரஷர் குக்கரில் சமைக்க  ஆரம்பித்தோம்.

Updated On : 4 ஆகஸ்ட், 2019 at 1:58 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:13 PM


இந்தியாவில்  சோறு சமைக்கும் போது கஞ்சி வீணாகிறதே என்று  பிரஷர் குக்கரில் சமைக்க  ஆரம்பித்தோம். இப்போது என்னடான்னா... குக்கரில் சமைக்கும் சோறில் கஞ்சி  அப்படியே இரண்டற கலந்திருப்பதால்  சர்க்கரை குறைபாடு  ஏற்படுகிறது. அதனால் கஞ்சியை வடித்துவிட்டு  சோறை உண்ணுங்கள் என்று பலரும் அறிவுறுத்துகிறார்கள்.   

வடித்து  எடுக்கும் கஞ்சியை யாரும் குடிப்பதில்லை. முன்பெல்லாம்  உடைகள் விறைப்பாக இருக்க  சோற்றுக் கஞ்சியில் தண்ணீர் சேர்த்து  உடைகளை  அதில் நனைத்து காயவைத்து இஸ்திரி  செய்வார்கள். இப்போது துணிகளைத்   துவைத்த பின்  போடும்  செயற்கை கஞ்சிக் கலவை  சந்தையில் வந்துவிட்டதால், சோற்றுக் கஞ்சியை  ஆடைகளுக்கு யாரும் பயன்படுத்துவதில்லை. வீணாக வெளியே கொட்டுகிறோம்.

டென்மார்க்கில்  விஷயம் தலைகீழ். அங்கே அரிசியிலிருந்து  வடித்து எடுக்கப்படும் கஞ்சிக்கு  அமோக வரவேற்பு. கடைகளில் "தண்ஸ்ரீங்  ஈழ்ண்ய்ந்'' என்ற பெயரில்  உடலுக்கு உறுதி அளிக்கும் பானம் என்று  விற்கப்படுகிறது. லிட்டர் கஞ்சியின் விலை 120  ரூபாய்! 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.