FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கம்போடிய நாடோடிக் கதை: இடி, மின்னல், மழை!

அடர்ந்த கம்போடிய காட்டுப் பகுதியொன்றில் ஒரு முனிவர் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம் ஒரு மந்திரப்பந்து இருந்தது.

பகிர்:

அடர்ந்த கம்போடிய காட்டுப் பகுதியொன்றில் ஒரு முனிவர் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம் ஒரு மந்திரப்பந்து இருந்தது.

இந்த முனிவரிடம், ஒரு தேவதையும், அரக்கனும் கல்வி கற்று வந்தனர். அவர்களுடைய பயிற்சி முடிவு பெற்ற போது, அவர்களிடையே ஒரு போட்டி நடத்தி வெல்பவருக்குத் தன்னிடம் உள்ள மந்திரப் பந்தை தருவது என முடிவு எடுத்தார் முனிவர். 

அதனால் இறுதியாக அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தார்!

Advertisement

Advertisement

அதிகாலையில், ""பூமியில் வளர்ந்திருக்கும் புற்களில், பனித்துளிகள் விழுந்திருக்கும். அவற்றை ஒரு கண்ணாடி குவளையில் சேகரித்து, யார் தன்னிடம் முதலில் தருகிறார்களோ, அவருக்கு மந்திரப்பந்தை பரிசாகத் தருவேன்'' என அறிவித்தார்.

தேவதையின் பெயர் மோனி மேகலா.

அரக்கனின் பெயர் ரீம் ஐசோ. அரக்கன், மிக அதிகாலையில் எழுந்து, புற்களை பூமியிலிருந்து பிடுங்கி அதிலிருந்து பனித்துளிகளை கண்ணாடி குவளையில் ஊற்றினான்.

மோனி மேகலா, முதல் நாள் இரவு பரவலாக இருந்த புற்களின் மீது ஒரு பெரிய துணியைப் பரப்பிவிட்டாள். அடுத்த நாள் காலை அந்தத் துணி முழுவதுமாக நனைந்திருந்தது. உடனே அதனை நன்கு முறுக்கி, பிழிந்து ஒரு கிளாஸ் முழுவதும் நிரப்பி  முனிவரிடம் கொண்டு போய் காட்டினாள்.

அவர் தேவதையைப் பாராட்டி, மந்திரப் பந்தை அவளுக்குப் பரிசாக அளித்தார்.

அரக்கனும் ஒரு வழியாக கிளாûஸ பனித்துளியால் நிரப்பி முனிவரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

அவர் அவனுக்கு ஒரு கோடரியை வழங்கினார்!

தேவதைக்கு மந்திரப் பந்து கிடைத்ததை அரக்கானால் ஏற்க இயலவில்லை. இதனால் தேவதையிடம் இருந்த பந்தை பிடுங்க கடும் கோபம் கொண்டு துரத்திக் கொண்டு ஓடினான்.

ஆனால் எவ்வளவு முயற்சித்தும், அரக்கனால் தேவதையைப் பிடிக்க இயலவில்லை. அவள் ஓடிக்கொண்டே இருந்தாள். இதனால் அவன் கோபம் மேலும் அதிகமாயிற்று.

பலன்... கோடரியை விட்டெறிந்து தேவதையின் கையிலிருந்த பந்தைப் பறிக்க அனுப்பினான். தேவதை பந்தை விண்ணில் எறிந்தாள்!

கோடரியும், மிக வேகமாகச் சென்று மந்திரப்பந்தை தாக்கியது! அப்போது பெரும் சப்தம் கேட்டது. அடுத்த நிமிடம் மந்திரப்பந்து பளிர்பளிர் என ஜொலித்தது. அந்த பளீர் வெளிச்சம் அரக்கனின் கண்களைப் பாதித்து கீழே விழுந்தான். அடுத்து மழை கொட்டியது. கீழே விழுந்த அரக்கன் கண் விழித்து எழுந்தான். பிறகு இன்று வரை தேவதையை துரத்திக் கொண்டேயிருக்கிறான்.

இந்தச் சம்பவம் "ஆஜ்ர்ய்ஞ் நஜ்ர்ய்ஞ்"என்ற பெயரில் இன்றும் நாட்டிய நாடகமாக கம்போடிய நாட்டுப்புறங்களில் நடத்தப்படுகிறது.

இந்தக் கதை சார்ந்த சிற்பங்கள்  அங்கோர் வாட் கோயிலில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோடரி..யும் மந்திரபந்தும் மோதியபோது பயங்கர சப்தம் எழுந்தது. 
அது இடி...பிறகு மந்திரப்பந்து பளிர் பளிர் என ஜொலித்தது! மின்னல்! மூன்றாவதாக மழை கொட்டியது! 

ஆக இடி, மின்னல், மழை இறைவன் தரும் பரிசு. இது நிகழ்ந்தால் மட்டுமே, பூமியில் மழைத் தண்ணீர் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்பது கம்போடியாவிலுள்ள கிராமப்புற விவசாயிகளின் நம்பிக்கை. 

இதனால் இன்னும் பயிரிடுவதற்கு முன், மழை வேண்டி வருடா வருடம் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதனை நாட்டிய நாடகமாகக் சொல்லப்படுவது மற்றொரு சிறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments