வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது குறித்து...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) 'எக்ஸ்' பக்கம், ‘எக்ஸ்’ விதிகளை மீறியதாகக் காரணம் காட்டி வெள்ளிக்கிழமை (மே 8) முடக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து, விசிக வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு பதிவைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தவெக தலைமையில் ஆட்சியமைக்க118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
Advertisement
Advertisement
மேலும், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கான ஆதரவை நேற்று (மே 8) தெரிவித்தது. அதிகாரப்பூர்வமாக விசிக ஆதரவு தெரிவிக்குமா? இல்லையா? என்பது குறித்து இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The 'X' page of the VCK was suspended on Friday (May 8), citing a violation of 'X' rules.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.