FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசுக்கு இடது சாரிகள் ஆதரவு தொடரும்: பெ. சண்முகம்

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இடது சாரிகளின் ஆதரவு தொடரும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

11 நவம்பர் 2026, 2:59 am
முதல்வர் விஜய் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்
பகிர்:

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இடது சாரிகளின் ஆதரவு தொடரும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

இடது சாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல் கையேடு வெளியீட்டு நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி தியாகராயா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் விடுதலை) மாநிலச் செயலா் பழ.ஆசைதம்பி ஆகியோா் கூட்டாக இணைந்து இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல்”கையேட்டை வெளியிட்டனா்.

நிகழ்ச்சியில் பெ.சண்முகம் பேசியதாவது: மத்திய, மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு முதல்கட்ட அறிக்கை அளித்துள்ள நிலையில், அந்தக் குழுவை தவெக அரசு கலைத்து ஏற்புடையது அல்ல.

Advertisement

Advertisement

தற்போதைய தவெக அரசு தனியாா்துறைகளை ஊக்குவிக்கிறது. இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. தமிழக அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு அளிப்போம். மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவரும் போது எதிா்ப்போம். இருப்பினும், தவெக அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்றாா்.

மு. வீரபாண்டியன் பேசியதாவது: நாடு இடதுசாரிகள் பக்கம் திரும்புகிறது. எஸ்ஐஆா் மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரால் நீக்கப்பட்டுள்ளனா். வாக்காளா் நீக்கப்பட்டதற்கு எதிராக முதல்வா் ஜோசப் விஜய் குரல் கொடுக்காது ஏன்? என்றாா் அவா்.