எப்போதும் தூய்மை!
கரோனாவின் வெறியாட்டத்தால் கொஞ்சம் கூட கலங்காத நாடுகளில் ஒன்று ஜப்பான். ஏன் ? என்ன காரணம்?
கரோனாவின் வெறியாட்டத்தால் கொஞ்சம் கூட கலங்காத நாடுகளில் ஒன்று ஜப்பான். ஏன் ? என்ன காரணம்?
சீனாவுக்கு பக்கத்து நாடு என்பதால் ஜப்பான் பக்கம் பெருமளவில் கரோனா தாவியிருக்க வேண்டும். ஆனால், கரோனாவால் தாவ முடியவில்லை. ஏன் ?
உலகம் முழுக்க கரோனா பீதியில் உறைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் தான் டோக்கியோ உள்பட ஜப்பான் நாட்டின் ஏழு நகரங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவை அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். இத்தனைக்கும் உலகின் மிக அடர்த்தியான மக்கள் நெருக்கம் மிகுந்த டோக்கியோவில் இப்போதுதான் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
Advertisement
ஜப்பானில் நோய்த்தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்காக ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களே காரணம்.
ஜப்பானில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களில் 60 விழுக்காடு பேர் எப்போதும் மாஸ்க் எனப்படும் முகமூடி அணிந்து வெளியே வருவதுதான் வழக்கம். வெளியூர் பயணத்தின்போதும் ஜப்பானியர்கள் இப்படி மாஸ்க் அணிவிப்பார்கள். குழந்தைகளுக்கும் அணிவார்கள். வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து கொள்வது அங்கே தொட்டில் பழக்கம். இந்த கரோனா மட்டுமல்ல, சாதாரண சளி கூட ஜப்பானியர்களை அவ்வளவு எளிதில்
அண்டாது.
ஜப்பானியர்களுக்கு சுத்தம் என்பது குழந்தைப்பருவத்தில் இருந்தே, அதாவது அ, ஆ கற்றுத்தரும்போதே சொல்லித் தரப்படுகிறது. அதனால், தெருவில் அவர்கள் குப்பைகளைப் போடுவதில்லை.
அதேப்போன்று ஜப்பானியர்கள் ஒருவருடன் ஒருவர் எப்போதும் கை
குலுக்குவதில்லை.
தலையைக் குனிந்து ஜப்பானியப் பாணியில் வணக்கம் மட்டுமே சொல்வார்கள். கைகளை அடிக்கடி கழுவுவது ஜப்பானிய கலாசாரங்களில் ஒன்று.
பொது கழிப்பிடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கைகளைக் கழுவ சானிடைசர்கள் "எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். அலுவலகம், லிஃப்ட், ரயில்நிலையம் உள்பட எங்கு நுழைந்தாலும், நுழைவதற்கு முன் கைகளை அலம்பிக் கொள்வது ஜப்பானியர்களின் பழக்கம்.
ஜப்பானியர்கள் அவர்களது பைகளில் எப்போதும் டிஸ்யூ பேப்பர் வைத்திருப்பார்கள். கைகளையும் முகத்தைக் கழுவியபின் டிஸ்யூ காகிதத்தால் துடைத்து அதை குப்பையில் எறிவார்கள்.
இது போன்ற காரணங்களால்தான் கரோனா சுலபமாக நுழைய முடியவில்லை.
உலக வரைப்படத்தில் ஜப்பான் நாடு சின்னதாகயிருந்தாலும், அவர்களுடைய சுகாதாரத்தைப் பார்த்து இந்த உலகமே வியந்து நிற்கிறது!