முகப்பு
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!

டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றத்தையும், சரிவையும் சந்தித்துள்ளனர்.

Updated On : 21 ஏப்ரல் 2026, 6:48 pm IST
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா. - கோப்புப் படங்கள்.
பகிர்:

டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றத்தையும், சரிவையும் சந்தித்துள்ளனர்.

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இரண்டு இடங்கள் முன்னேறி, 6-வது இடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் சறுக்கி, 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இந்த அதிரடியான ஆட்டத்தால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் முதல் போட்டியில் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, முதல் இரண்டு போட்டிகளில் 13 ரன்கள் மற்றும் 12 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், அவர் தரவரிசையில் ஒரு இடம் சறுக்கியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 11-வது இடத்தில் உள்ளார்.

summary

Indian players have experienced both advancements and declines in the ICC T20 rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.