வாடகை தாய்மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்
கருத்தரிக்க முடியாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையும் ஒன்றாகும்.
கருத்தரிக்க முடியாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையும் ஒன்றாகும்.
இந்த நிலையில் உலகில் முதல் முறையாக விலங்குகளில் இவ்வகை செயற்கை கருத்தரித்தல் மருத்துவ முறையை உபயோகித்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம் டெலாவேர் நகரில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் கிபிபி என்ற ஆறு வயது சிறுத்தை உள்ளது. ஒரு சில மருத்துவ காரணங்களால் கிபிபி தாய்மை அடைய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிபிபியின் சினை முட்டைகளைப் பிரித்து ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து அதை இஸ்ஸி என்ற மூன்று வயது சிறுத்தையின் கருப்பைக்குள் செலுத்தினர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது இஸ்ஸி, இரண்டு சிறுத்தை குட்டிகளை ஈன்றுள்ளது. அந்தக் குட்டிகள் வழக்கமான முறையில் பிறக்கும் சிறுத்தை குட்டிகளைப் போலவே நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளில் செயற்கை கருத்ததரித்தலை உபயோகிக்கும் சோதனை முயற்சியை விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது முதன்முறையாக வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.