செயலிகள் நிறுத்தம்: சாக்ஷி நன்றி
லடாக் எல்லைப் பிரச்னையில் இந்திய - சீன எல்லைகள் பரபரத்துக் கிடக்கிறது. இதனால் சீன தயாரிப்புகளுக்கு இந்திய பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
லடாக் எல்லைப் பிரச்னையில் இந்திய - சீன எல்லைகள் பரபரத்துக் கிடக்கிறது. இதனால் சீன தயாரிப்புகளுக்கு இந்திய பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சில வாரங்களுக்கு முன் நடிகை சாக்ஷி அகர்வால், தன்னை டிக்டாக்கிலிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு டிக் டாக், உட்பட சீனாவின் 59 செல்லிடப் பேசி செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.