முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தண்ணீரிலும் கரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதில் பிரான்சும் தப்பவில்லை. அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதில் பிரான்சும் தப்பவில்லை. அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு போர்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரீஸ் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

பாரீஸ் நகரின் சீன் நதி மற்றும் எவர்கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, இந்த சுத்தப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது சற்று அசுத்தமாக உள்ளதால் பொதுமக்களின் உபயோகத்துக்கு வழங்கப்படுவதில்லை. பூங்காக்கள், நகரில் உள்ள நீருற்றுகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகளுக்கு திடீரென எழுந்த சந்தேகத்தின் பேரில் சீன் நதி மற்றும் எவர்கால்வாய் தண்ணீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் அவர்களுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தண்ணீரில் கரோனா இனத்தைச் சேர்ந்த வைரஸ் இருந்தது.

இது தவிர நகரின் 27 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் நான்கில் சிறிய அளவிலான வைரஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை தூய்மையாக்கும் பணிகளை மேற்கொள்ள பிரான்ஸ் அரசு உத்தரவிட்டு உள்ளது. 
தண்ணீரிலும் கூட கரோனா வைரஸ் இருந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.