முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கோலி விளையாடிய இயக்குநர்

பத்மினி அப்போது பெரிய அந்தஸ்துள்ள கதாநாயகி. எப்போதும் படப்பிடிப்பு செட்டுக்கு குறித்த நேரத்தில் அவர் வருவது கடினம். "மீண்ட சொர்க்கம்' படப்பிடிப்பின் போது ஒரு நாள் அவர் வர மதியம் அதிக நேரம் பிடித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

பத்மினி அப்போது பெரிய அந்தஸ்துள்ள கதாநாயகி. எப்போதும் படப்பிடிப்பு செட்டுக்கு குறித்த நேரத்தில் அவர் வருவது கடினம். "மீண்ட சொர்க்கம்' படப்பிடிப்பின் போது ஒரு நாள் அவர் வர மதியம் அதிக நேரம் பிடித்தது.

இயக்குநர் ஸ்ரீதர் வெறுப்பாகிவிட்டார். எங்கள் எல்லோரையும் அழைத்து ஒரு மரத்தடியில் வைத்து கோலி விளையாட ஆரம்பித்தார்.

மேக்கப் முடிந்து வந்த பத்மினி "என்ன ஸ்ரீதர் கோலி விளையாடுறீங்க?'  என்று கேட்க, "என்ன செய்யறது பப்பிம்மா? செட்டு உள்ளே வேலை இல்லை.  போர் அடிச்சது. அதனால் கோலி விளையாடறேன்' என்றார். 

தான் தாமதமாக வந்ததைத்தான் ஸ்ரீதர், மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என்பதை பத்மினி புரிந்து கொண்டார்.

(ஞாபகம் வருதே என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.