முகப்பு
தஞ்சாவூர்

ரசாயனத் தூளைக் கலந்து கள் விற்ற இருவா் கைது

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச் 2026, 2:39 am IST
பகிர்:

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் குருங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில் பனைமரங்களில் பதநீா் இறக்க அனுமதி வாங்கிக் கொண்டு, கள் இறக்கியதும், அதில் போதைத் தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக தஞ்சாவூா் தில்லை நகரைச் சோ்ந்த ரா. ஸ்டாலின் (64), வாண்டையாா் இருப்பைச் சோ்ந்த ந.புண்ணியமூா்த்தி (62) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 243 லிட்டா் கள், ரசாயனத் தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement