முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நேதாஜி நோட்டு !

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு 1944-ஆம் ஆண்டு ஏப்ரலில் தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகின்ற பர்மாவின் ரங்கூன் நகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  Bank of independence என்ற வங்கியை தொடங்கினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு 1944-ஆம் ஆண்டு ஏப்ரலில் தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகின்ற பர்மாவின் ரங்கூன் நகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  Bank of independence என்ற வங்கியை தொடங்கினார்.

லகெங்கிலும் இருந்த இந்தியர்கள் அளிக்கும் நன்கொடையை கையாளுவதற்கே இந்த வங்கி உருவாகியது.

1 லட்சம் மதிப்புடைய நோட்டின் இடப்புறத்தில் நேதாஜி உருவமும், வலப்புறத்தில் பிளவுப்படாத இந்தியாவின் வரைபடத்துடன் சுதந்திர பாரதம் என ஹிந்தி மொழியில் இடம்பெற்று உள்ளது. மத்தியில் "ஜெய்ஹிந்த்' என ஆங்கிலத்திலும், I Promise to pay the bearer the sum of one lac எனக் கீழே இடம்பெற்றுள்ளது. நேதாஜியின் 1 லட்சம் நோட்டில் மூவர்ணக் கொடியும் இடம்பெற்று இருக்கும். 

1980-இல் ராம் கிஷோர் துபே என்பவர் தன் தாத்தாவின் பழைய ராமாயணப் புத்தகத்தில் நேதாஜியின் உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டை கண்டுள்ளார். 

அவரின் தாத்தா ப்ரகில்லால் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.

2010 ஜனவரி 23-ஆம் தேதியன்று நேதாஜியின் 113- வது பிறந்தநாள் நினைவையொட்டி நேதாஜி உருவம் அச்சிட்ட 1 லட்சம் மதிப்புடைய நோட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நேதாஜி உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டு பற்றி இங்கு பலரும் அறியாமலே உள்ளனர். தேசத்தின் சுதந்திரத்திற்கு போராடிய தன்னலமற்ற வீரரே நேதாஜி .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.