வேப்பங்குச்சிக்கு வந்த மவுசு!
பண்டைய காலம் முதலே நம் முன்னோர்கள் பல் துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்தினார்கள். தற்போது, இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள்.
பண்டைய காலம் முதலே நம் முன்னோர்கள் பல் துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்தினார்கள். தற்போது, இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு வேப்பங்குச்சியின் மகிமை தெரியாது.
கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும். தற்போது கிராமப்புறங்களில் கூட இந்தப் பழக்கம் மாறிவிட்டது.
ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்ம ஊர் வேப்பங்குச்சியின் மகிமையை நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். 6 வேப்பங்குச்சியின் விலை 680 ரூபாய்க்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.