முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெற்றி சமர்ப்பணம்

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "க/பெ ரணசிங்கம்'.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:


பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "க/பெ ரணசிங்கம்'. ஜீ பிளக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.  

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது.... "" "க/பெ ரணசிங்கம்' படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவுக்குக் கதையை ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார் இயக்குநர் விருமாண்டி. ஒரு கதையே படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும்தான், தற்போது இந்தப் படம் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் ராஜேஷ், என்னுடன் நடித்த விஜய் சேதுபதி சார் மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி.  இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அப்படியே பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. கண்டிப்பாக இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வணங்கி, இந்தப் படத்தின் வெற்றியை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →