முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஹிந்தி பாடகிக்கு  கரோனா

சமீபத்தில் வெளியான "சடக் 2' படத்தில் "தும் சே ஹை..." பாடலைப் பாடி கவனம் பெற்றார் லீனா போஸ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

சமீபத்தில் வெளியான "சடக் 2' படத்தில் "தும் சே ஹை..." பாடலைப் பாடி கவனம் பெற்றார் லீனா போஸ். இந்த நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது..... ""சமீபத்தில் நான் பாடிய பாடல் ஒன்று வெளியானது. இதற்காகத் தக்க பாதுகாப்பு முறைகளுடன் கொல்கத்தாவில் பல பேட்டிகளை அளித்தேன். ஒருநாள் நான் வீட்டுக்குத் திரும்பியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஓய்வு எடுத்துக்கொண்டேன். சில நாள்கள் கழித்து காய்ச்சல் ஏற்பட்டது. கரோனா பரிசோதனை மூலமாக எனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது தெரிய வந்தது. இதன்பிறகு என்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தினரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள். கரோனாவை எதிர்கொள்வது எளிதல்ல. காய்ச்சலால் உடல் சூடாகும்போது சூரியனுக்கு அடியில் நிற்பது போல இருக்கும். பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. இப்போது ஓய்வு எடுக்க முயல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →