த்ரிஷா பாராட்டு
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் "கர்ஜனை', "சதுரங்க வேட்டை-2', "பரமபத விளையாட்டு', "ராங்கி', "சுகர்', "1818' ஆகிய படங்கள் உள்ளன. இது தவிர மணிரத்னம் இயக்கும் "பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கரோனா பொது முடக்கம் போடப்பட்டதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் த்ரிஷா, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, விடியோ பதிவிடுவது என ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் த்ரிஷாவின் முகத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
இதில் என்ன சிறப்பு என்றால், அவர் கண்ணைக் கட்டிக்கொண்டு வரைந்துள்ளார். ரசிகரின் இந்தத் திறமையைப் பார்த்து சிலாகித்துப்போன த்ரிஷா அதைத் தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.