பணிகள் நிறைவு
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் "அண்ணாத்த'. கிராம பின்னணி கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் "அண்ணாத்த'. கிராம பின்னணி கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியையொட்டி "அண்ணாத்த' படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட முடிவு செய்துள்ளது. இதுவரை 95 சதவீத படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ள படக்குழு சென்னையில் சில காட்சிகளை சமீபத்தில் படமாக்கியது. இதற்காக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்ஸில் செட் ஒன்று அமைக்கப்பட்டு 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
இதையடுத்து இன்னும் சில காட்சிகளை ரஜினி இல்லாமல் கொல்கத்தாவில் படமாக்கவுள்ளனர். விரைவில் இந்த படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் ரஜினி ஈடுபட்டு வந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கிராக் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த இந்த டப்பிங் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
Advertisement