ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப். 6) அறிமுகமாகியுள்ளது குறித்து...
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப். 6) அறிமுகமாகியுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கியுள்ளது. ரியல்மி கிளைகளிலும் இணைய விற்பனை தளங்களிலும் விற்பனை நடைபெற்று வருகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மி நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் ரியல்மி 16 வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நீடித்த பேட்டரி திறன், அதிவேக திறன் வாய்ந்த திரை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
ரியல்மி 16 ஸ்மார்ட்போன் பல்வேறு நினைவக வகைகளில் கிடைக்கின்றன. 8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 31,999.
Advertisement
Advertisement
8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 33,999.
12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 36,999.
ரியல்மி 16 சிறப்பம்சங்கள்
ரியல்மி 16 ஸ்மார்ட்போன் 6.57 அங்குல அமோலிட் திரை உடையது.
திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
அதிக அளவு திரை வெளிச்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுவெளிகளில் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்காது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ ஆக்டா கோர் சிப்செட் உடையது.
பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஸ்மார்ட்போன்களின் சிறப்பே பேட்டரிதான் என்பதால், 7,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 60W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உறுதியும் 3 ஆண்டுகள் ஆன்டிராய்டு அப்டேட்டுக்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
Realme 16 5G first sale in India: Everything you need to know before buying
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.