தனி நாயகியான நபா நடேஷ்
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் , ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வரும் நபா நடேஷ் பாலிவுட்டிலும்
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங், ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வரும் நபா நடேஷ் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார்.
கன்னடத்தில் கடந்த 2015-இல் "வஜ்ரகயா' என்ற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால், தெலுங்கு படவுலகில் சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டுமே 275 கோடி. மேலும் ஹிந்தியில் ஹிட்டான "அந்தாதுன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் ஹிந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க தேர்வாகி இருக்கிறார்.