பாட்டியும் பட்டதாரியும்
துவாரகா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கதிர்'.வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி,பாவ்யா ட்ரிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
துவாரகா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கதிர்'.வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி,பாவ்யா ட்ரிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் தினேஷ் பழனிவேல். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....'' கதையின் நாயகன் பற்றற்ற வாழ்க்கை பாதையை ஒரு முதிர்ந்த பாட்டியின் துணைகொண்டு வென்று கடக்கிறான்.
நாம வாழ்றது முக்கியமில்ல... யாருக்காக வாழறோங்கிறது தான் முக்கியம் அதுபோலவே கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை மாறுகிறது.
பாட்டியின் மீது கொண்ட அன்பால் கதிர் தன் தீய பழக்கங்களை விட்டு புதிய ஒருவனாக மாறுகிறான். பாட்டியின் கதையை கேட்ட கதிர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்திலேயே இருந்து மக்களுக்கு பயன்படும்படி வாழவேண்டுமென்று முடிவெடுக்கிறான். இதுதான் கதை களம். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன'' என்றார் இயக்குநர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.