ஞாயிறு கொண்டாட்டம்

அம்மா உணவகம்

மனித நேயமும், சமூக அக்கறையும் கொண்ட ஒருவர் சில இளைஞர்களுக்கு தம்மிடத்தில் அடைக்கலம் கொடுக்கிறார்.

DIN


மனித நேயமும், சமூக அக்கறையும் கொண்ட ஒருவர் சில இளைஞர்களுக்கு தம்மிடத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். வெவ்வேறு லட்சியங்களுடன் இவ்விளைஞர்களும் பயணிக்கின்றனர். அதே குடியிருப்பில் பல கனவுகளோடு வெவ்வேறு எளிய குடும்பங்களும் வசிக்கின்றனர். இவர்களின் லட்சியங்களும் கனவுகளும் பிரதிபலிக்கும் விதமாக நெஞ்சுருக வைக்கும் சம்பவங்களுடன் உருவாகி வரும் படம் "அம்மா உணவகம்'.

வெங்கட்பிரபு கதாநாயகனாக நடித்த "வசந்தம் வந்தாச்சு', மாஸ்டர் மகேந்திரன் நடித்த "என்றுமே ஆனந்தம்', போன்ற படங்களை இயக்கியவர் விவேக பாரதி. இவர் இயக்கும் நான்காவது படம் இது. படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்ராஹீம் தயாரிக்கிறார்.

அஸ்வின் கார்த்திக், சசி சரத், ஸ்ரீநிதி, இந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமூக அக்கறை கொண்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி உதயகுமார் நடிக்கிறார். "ஈரமான ரோஜாவே' சிவா, சரவண சக்தி, நாட்டுப்புற பாடகர் மன்னை ஸ்ரீ மூர்த்தி, செல்வம், காயத்ரி, படத்தின் இயக்குநர் விவேக பாரதி, தயாரிப்பாளர் இப்ராஹீம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லத்திக்குளம் வனப் பகுதி விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

SCROLL FOR NEXT