முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தர்மத்தை கற்றுக் கொடுத்தவர்

கல்வி வள்ளல் அழகப்பச் செட்டியார், ஒரு நாள் சென்னையிலிருந்து  திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

கல்வி வள்ளல் அழகப்பச் செட்டியார், ஒரு நாள் சென்னையிலிருந்து  திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு ரயில்வே லெவல் கிராசிங்கில் கார் நின்று கொண்டிருந்தது. ஒரு வயதான ஏழைப் பெண் நுங்குகளை விற்றபடி வந்தார். அவரிடம் அழகப்பச் செட்டியார் கொஞ்சம் நுங்குகளை வாங்கிக் கொண்டு நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தார். அந்த ஏழைப் பெண் வியப்புடன்" நான் நூறு ரூபாய் நோட்டை இதுவரையில் பார்த்தது கூட கிடையாது. சில்லறை இல்லையே' என்றார். "மீதி சில்லறை வேண்டாம் நீயே வைத்துக் கொள்' என்றார் அழகப்பச் செட்டியார். 

வியப்பில் திகைத்துப் போன அந்த ஏழைப் பெண் கூடையில் இருந்த நுங்குகள் அனைத்தையும் அங்கே இருந்த மக்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டார். அழகப்பச் செட்டியார் அவரிடம் "ஏன் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துவிட்டாய்' என்று கேட்டார். அதற்கு அந்த ஏழைப் பெண்" உங்களிடமிருந்து தர்மத்தைக் கற்றுக் கொண்டேன்.' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். 

(கல்வி வள்ளல் அழகப்பச் செட்டியார் நூலிலிருந்து)

முழு கட்டுரையைப் படிக்க →