முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உரிமையாளருக்கு பாராட்டு

மாயா என்று பெயரிடப்பட்டுள்ள "ஸ்மோயிட்'  வகையைச் சேர்ந்த நாய் மனிதர்களை போன்று பல வேலைகளை செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மாயா என்று பெயரிடப்பட்டுள்ள "ஸ்மோயிட்'  வகையைச் சேர்ந்த நாய் மனிதர்களை போன்று பல வேலைகளை செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் மாயா தான் விளையாடி முடித்த பிறகு பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்களை, அதற்கான கூடையில் வைக்கிறது.

உரிமையாளரைத் தினமும் காலை மிகவும் கனிவான முறையில் எழுப்பி விடுகிறது. தனது உரிமையாளருக்கு உணவைப் பரிமாற முயற்சிக்கிறது. உரிமையாளர் ஷாப்பிங் முடித்து வந்தால், பொருள்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல உதவுகிறது.

Advertisement

இந்த நாயின் செயல்களை விடியோவாக எடுத்த அதன் உரிமையாளர் அதனை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் விடியோவாக ஷேர் செய்துள்ளார். இந்த விடியோவிற்கு இன்ஸ்ட்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகிறது.

இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விடியோவிற்கு லைக் செய்துள்ளனர் . இந்த விடியோவிற்கு லைக் செய்துள்ள இன்ஸ்ட்டாகிராம் வாசிகள் நாயின் நற்குணங்களையும் அதன் உரிமையாளரையும் பாராட்டி வருகின்றனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments